இந்தியா கூட்டணி கட்சிகளின் முக்கிய முடிவுகள்!
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியினுடைய மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. அதனுடைய 2வது நாளான இன்று பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தியா கூட்டணியுடைய ஆலோசனைக் கூட்டத்தில், சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் தரையறுக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசத்தை பெருமிதம் அடைய செய்திருக்கும் செயலுக்கு வாழ்த்துக்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மேலும் வரக்கூடிய நாடாளுமன்ற பொதுத் தேர்தலை இந்தியா கூட்டணி கட்சிகள் இணைந்து சந்திப்பது என்றும், அதற்காக மாநிலங்கள் வாரியாக தொகுதி பங்கீடுகளை விரைவாக நடத்துவது, தொகுதி பங்கீடுகளில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு இருப்பது, நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்துவது, நடத்தப்படும் பொதுக்கூட்டங்களில் மக்களுடைய பிரச்சனைகள் குறித்து பேசுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2வது நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக மல்லிகார்ஜுன கார்கே கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளிடம் ஒரு பேரை பரிந்துரைக்கும் படி கேட்டிருந்தார். அதன்படி கொடுக்கப்பட்ட பெயர்களை கொண்டு 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒருங்கிணைப்பு குழுவில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணி கட்சிகளினுடைய தலைவர் தாக்குதலுக்கு தயாராகுங்கள். தற்போதைய அரசு சிபிஐ, அமலாக்கத்துறை என்ற பல்வேறு அரசு அமைப்புகள் மூலமாக ரெய்டு, கைது என்று பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடும் அதை எதிர்க்க தயாராகுங்கள் என்று பேசினார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதே நம்முடைய ஒற்றை இலக்கு அதற்காக பிஜேபியை ஒன்றிணைந்து தோற்கடிப்போம் என்று கூறின கூறினார்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, இணையும் பாரதம், இந்தியா வெல்லும் என்ற முழக்கத்தை எழுப்பிய பொழுது அனைத்து கட்சி தலைவர்களும் பின் தொடர்ந்து முழக்கத்தை எழுப்பினர்.