தில்லியில் செப்.13 இல் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

opposition parties
opposition parties

ந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் புதுதில்லியில், வருகிற 13 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் நடைபெற உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே இந்தியா எதிர்க்கட்சிக் கூட்டணியின் தேர்தல் பிரசார குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மிலாப் கட்டிடத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே இந்தியா எதிர்க்கட்சிகள் கூட்டணியின் தேர்தல் பிரசார குழுவில் 19 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். இப்போது மேலும் இரு உறுப்பினர்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து குழுவில் மொத்தம் 21 உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவின் திருச்சி சிவா மற்றும் பிடிபி கட்சியின் மெஹ்பூப் பெக் ஆகியோர் புதிதாக இடம்பெற்ற உறுப்பினர்களாவர்.

தேர்தல் உத்திகளை வகுக்கும் குழுவில் குர்தீப் சிங் (காங்கிரஸ்), சஞ்சய் ஜா (ஐக்கிய ஜனதாதளம்), அனில் தேசாய் (சிவசேனை-உத்தவ் பிரிவு), பி.சி.சாக்கோ (தேசியவாத காங்கிரஸ்), சம்பை சோரன் (ஜே.எம்.எம்.), கிரன்மோய் நந்தா (சமாஜவாதி), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி), அருண் குமார் (மார்க்சிஸ்ட்), வினோய் விஸ்வம் (இந்திய கம்யூனிஸ்ட்), ஓய்வுபெற்ற நீதிபதி ஹஸ்நைன் மசூதி, (தேசிய மாநாடு), ஷாஹித் சித்திக் (ஆர்.எல்.டி.), பிரேமசந்திரன் (ஆர்.எஸ்.பி.), ஜி.தேவராஜன் (ஏஐஎஃப்பி) ரவி ராய் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), திருமாவளவன் (விசிக), காதர் மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கேரள காங்கிரஸ் மணி பிரிவைச் சேர்ந்த ஜோஸ் கே.மணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக இந்தியா எதிர்க்கட்சிக் கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் ஒருங்கிணைந்து போட்டியிடுவது என்றும், தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில், பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் இறுதி செய்யப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்களவைத் தேர்தலில் ஒருங்கிணைந்து போட்டியிடுவது என்றும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்சிகள் செல்வாக்குடன் இருப்பதால் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் சுமுகமாக தீர்வுகாண்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணிகள், பொதுக்கூட்டங்களை விரைந்து நடத்தவும், பொது மக்கள் பிரச்னையை முன்னெடுத்து தேர்தல் பிரசாரம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தியா எதிர்க்கட்சிக் கூட்டணியின் முதல் கூட்டம் பிகார் மாநிலம், பாட்னாவில் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவரும், முதல்வருமான நிதிஷ்குமார் தலைமையில் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com