ஆசிய போட்டி 2023: நூறு பதக்கங்களை வென்று இந்தியா சாதனை!

ஆசிய போட்டி 2023: நூறு பதக்கங்களை வென்று இந்தியா சாதனை!

சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2023-ல் இன்று இந்தியா 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. ஆசிய போட்டியில் நூறு பதக்கங்களை இந்தியா குவித்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

அதிக பதக்கங்களை வென்றதன் மூலம் இந்திய தடகள வீர்ர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். 100 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்திய வீர்ர்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

“ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 100 பதக்கங்கள் என்ற மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளதில் இந்திய மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சாதனையை எட்ட உதவிய இந்திய தடகள வீர்ர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு வீரரின் பிரமிக்கத்தக்க செயல்பாடுகள் இந்த வரலாற்று வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. இந்த சாதனை மூலம் இந்திய மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்கின்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டி குழுவினரை வரவேற்பதிலும், அவர்களுடன் உரையாடுவதிலும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர்க்கான கூட்டு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான அதிதி கோபிசந்த் சுவாமி தனிநபர் கூட்டு வில்வித்தை போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.

அதே நேரத்தில் இந்திய மகளிர் கபடி அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது. இதையடுத்து இந்தியா 25 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. மொத்த பதக்க எண்ணிக்கையில் 100 என்ற இலக்கை தாண்டியுள்ளது. இந்திய மகளிர் கபடி அணியினர், சீன தைபே அணியை வென்று தங்கம் வென்றுள்ளனர்.ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பதக்கப்பட்டியலில் இந்தியா 100 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com