
சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
35 நாட்களாக புவி வட்டப்பாதை மற்றும் நிலவின் சுற்றுப்பாதைகளை நிறைவு செய்த விண்கலத்தில் இருந்து, வியாழன் பகல் ஒரு மணியளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக சந்திரயான் 3 தரையிரக்கப்பட்டது.
இதை உலக மக்கள் அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர். பிரதமர் மோடியும் பிரிக்ஸ் மாநாடு முடித்துவிட்டு நேராக இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரடியாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிலையில் அடுத்த அடியாக சூரியனை ஆய்வு செய்வதற்கு இஸ்ரோ தயாராகியுள்ளது. வரும் செப்டம்பர் 2ஆம் தேதி ஆதித்யா எல் 1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது. இதனையும் மக்கள் எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர். சந்திரயான் வெற்றி பெற்றது போல் ஆதித்யாவும் வெற்றி பெறும் என தங்களது வாழ்த்துக்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.