வலிமையான இந்தியாவை உருவாக்க இந்திராகாந்தி முக்கிய பங்காற்றியவர்: கார்கே புகழாரம்!

Mallikarjun Kharge
Mallikarjun Kharge

லிமையான முற்போக்கான இந்தியாவை உருவாக்குவதில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி முக்கிய பங்காற்றியவர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்திராகாந்தியின் நினைவுநாளில் புகாழாரம் சூட்டினார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1984 ஆம் ஆண்டு இதே நாளில் அவரது பாதுகாவலர்களாலேயே படுகொலைசெய்யப்பட்டார்.

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திராகாந்தி, நமது அடையாளம். வலிமையான, முற்போக்கான இந்தியாவை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவருடைய மன உறுதியும், திறமையும், தனித்துவமான செயல்திறனும் இந்த நாளில் நினைவுகொள்ளத்தக்கவை என்று மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்காக அவரது பங்களிப்பை, அர்ப்பணிப்பை ஒரு மேற்கோள் மூலம் கார்கே சுட்டிக்காட்டினார்.

“எனது உயிர்மூச்சு இருக்கும் வரை எனது சேவை தொடரும். நாட்டிற்காக இரத்தம் சிந்தவும் தயங்க மாட்டேன். என்னுடை ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை வாழவைக்கும்” என்று இந்திரா குறிப்பிட்டதை அவர் எக்ஸ் தளத்தில் எடுத்துரைத்தார்.

காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டின் முதல் பெண் பிரதமருக்கு எங்களின் இதயபூர்வமான அஞ்சலி. வலிமை, மன உறுதி, வலிமையான தலைமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் இந்திராகாந்தி என்று அவரது நினைவுநாளில் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாளையொட்டி காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, கட்சியின் எம்.பி. ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் தலைநகர் தில்லியில் உள்ள சக்தி ஸ்தலத்தில் அவருக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இந்திரா காந்தி 1966 ஆம் ஆண்டு ஜனலரி முதல் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். பின்னர் மீண்டும் ஜனவரி 1980 முதல் 1984 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்படும் வரை பிரதமராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com