எதிர்காலத்தில் டவர் இல்லாமல் செல்போன்கள் செயல்பட வாய்ப்பு:மயில்சாமி அண்ணாதுரை தகவல்!

மயில்சாமி அண்ணாதுரை
மயில்சாமி அண்ணாதுரை

ந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் செல்போன்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் செல்போன்களுக்கு சிக்னல் கொடுக்கும் டவர்களின் எண்ணிக்கையும் கோடி கணக்கில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், விண்வெளி துறையில் இந்தியா அடைந்திருக்கும் முன்னேற்றம் காரணமாக எதிர்காலத்தில் செல்பான் டவர்கள் குறைக்கப்பட்டு நேரடியாக செயற்கைகோள் மூலம் இயங்கும் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் உருவாக்க வாய்ப்புண்டு என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்களிடம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறை குறித்தும், விண்வெளி துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” இந்தியா விண்வெளி துறையில் புரட்சியை செய்து வருகிறது. குறிப்பாக இந்தியா தொடர் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ஏவுதளம் மிக முக்கிய நிலையமாக உருவெடுக்கும். மேலும் வர்த்தக ரீதியிலான ராக்கெட்டுகளை அனுப்ப இந்தியா தயாராகிவிட்டது. இதனால் எதிர்காலத்தில் இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து தினம் தினம் ராக்கெட்டுகளை அனுப்ப வேண்டிய சூழல் உருவாகும். இதன்காரணமாக இந்தியா விண்வெளி துறையில் வருமானம் ஈட்டும் நிலையை எட்டி இருக்கிறது.

அதேபோல், வருங்காலங்களில் டவர்கள் இல்லாத வகையில் செயற்கைக்கோள் வசதியுடன் இயங்கக்கூடிய செல்போன்கள் பயன்பாட்டிற்கு வரும். இது செயற்கைக்கோள் உதவியுடன் இயங்கும். இதனால் டவர் பயன்பாடு பெருமளவில் குறையும்.நிலவை ஆய்வு செய்வதில் இந்தியா அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்து இருக்கிறது. வருங்காலங்களில் நிலவில் இருந்து கனிம வளங்களை எடுத்து எரிசக்தி தயாரிக்கவும் வாய்ப்புள்ளது.

இந்தியாவுடைய விண்வெளி துறை வளர்ச்சி தற்போது முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. இது குறித்து மக்களிடமும், இளைஞர்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.மேலும் ஜப்பானில் இளைஞர்களுடைய எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு ஜப்பானில் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com