ஆதித்யாL1 திட்டத்தை தலைமையற்று நடத்தும் தமிழச்சி நிகர்சாஜி: யார் இவர் வாங்க தெரிஞ்சுக்கலாம்!

ஆதித்யாL1 திட்டத்தை தலைமையற்று நடத்தும் தமிழச்சி நிகர்சாஜி: யார் இவர் வாங்க தெரிஞ்சுக்கலாம்!

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நாளை விண்ணில் செலுத்தவுள்ள ஆதித்யா எல்1 விண்கல தயாரிப்பின் திட்ட இயக்குநராக தென்காசியைச் சேர்ந்த நிகர்சாஜி செயல்பட்டு வருகிறார்.

நிலவின் தென்துருவ பகுதியில் சந்திராயன் 3 திட்டம் வெற்றிகரமாக தரையிறங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இத்திட்டத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் தலைமையேற்றிருந்த நிலையில், தற்போது சூரியனை ஆய்வுச் செய்யும் ஆதித்யாL1 திட்டத்தையும் தமிழர் ஒருவர் தலைமையேற்றிருப்பது கவனம்பெற்றுள்ளது.

அரசு பள்ளி, கல்லூரியில் படித்தவர்

இதனைத்ததொடர்ந்து ஆதித்யாL1 திட்ட இயக்குநர் நிகர்சாஜி குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆதித்யாL1 திட்ட இயக்குநராக உள்ள நிகர்சாஜி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் செங்கோட்டையில் உள்ள எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர், 1978 - 79ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்தார்.

அப்போதே 500-க்கு 433 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக சாதனை படைத்தார். இதனைத்தொடர்ந்து 12-ம் வகுப்பு படித்தார். 1200-க்கு 1008 மதிப்பெண்கள் பெற்று மீண்டும் பள்ளியின் முதல் மாணவியாக சாதனை படைத்தார். படிப்பில் சிறந்த மாணவியாக விளங்கிய நிகர்சாஜி தன் கல்லூரி படிப்பை திருநெல்வேலியில் அரசு பொறியியல் கல்லூரியில் 1986ம் ஆண்டு முடித்தார்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி

பின்னர் பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடர்ந்த நிகர்சாஜி, 1987- ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். இவரின் கணவர் வெளிநாட்டில் பொறியியலாளராக பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் வெளிநாட்டில் பொறியியல் படிப்பிலும், மகள் பெங்களூருவில் எம்பிபிஎஸ் படித்துவருகிறார்.

பெங்களூருவில் வசித்துவரும் நிகர்சாஜி கடந்த 36 ஆண்டுகள் இஸ்ரோவில் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றிவரும் நிகர்சாஜி தனது ஆர்வத்தினால் பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுப்ட்டுள்ளார். அதேபோல் விஞ்வெளி ஆராய்ச்சி தொடர்பாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள சர்வதேச விண்வெளி மையங்களுக்கு பயிற்சிக்காக சென்றுள்ளார் நிகர் ஷாஜி.

முன்னதாக சந்திராயன் 3 திட்டத்திலும் நிகர் ஷாஜி பணியாற்றி இருந்தார். இந்நிலையில் தற்போது ஆதித்யாL1 திட்டத்தின் இயக்குநரான நிகர்ஷாஜி செயல்பட்டுவருகிறார். சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ ஏவவுள்ள ஆதித்யா எல்- 1 விண்கலத்துக்கான 24 மணி நேர கவுன்டவுன் இன்று வெற்றிகரமாக தொடங்கியது

ஆதித்யா- எல்1 சிறப்புகள்

சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் ஆதித்யா- எல்1 விண்கலம் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவு குறித்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ,அதனைத் தொடந்து சூரியன் குறித்த ஆய்விலும் ஈடுபடுகிறது. இந்த ஆதித்யா எல்- 1 விண்கலம், பி.எஸ்.எல்.வி.சி- 57 ராக்கெட் மூலம் நாளை காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

தயார் நிலையில் உள்ள ஆதித்யா- எல்1 விண்கலம், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு  கொண்டுசெல்லப்பட்டது. நாளை விண்ணில் ஏவப்பட் உள்ள ஆதித்யாL1 சூரியன் மற்றும் பூமியின் மையப் பகுதியான 'லெக்ரேஞ்சியன் பாயின்ட் ஒன்'-ஐ மையமாகக் கொண்டு இந்த விண்கலம் ஏவப்பட உள்ளது.

நான்கு மாத கால பயணத்திற்குப் பிறகு  இந்த விண்கலம் அதன் சுற்றுப்பாதையில் நுழைய உள்ளது. பின்னர்  சூரியனைப் பற்றிய ஆய்வுகளை ஆதித்யா- எல்1 மேற்கொள்ள உள்ளது. சூரியனில் எழக்கூடிய சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும் இந்த முயற்சி பயனுள்ளதாக இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இதுபோன்ற விண்கலத்தை அனுப்பும் நான்காவது நாடு இந்தியா. 

விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்களின் சாதனை சரித்திரம்

இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தில் தமிழகத்திச் சேர்ந்த விஞ்ஞானிகள் தலைமை தாங்கிவருவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் பெருமைச் சேர்ப்பதாக உள்ளது. முன்னதாக நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் திட்டத்தை துவக்கியபோது, அதன் திட்ட இயக்குநராக கோவையைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை இருந்தார். அப்போது சந்திரயான் 1 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது.

தொடர்ந்து சந்திரயான்-2 திட்ட இயக்குநராக வனிதா முத்தையா இருந்தபோது திட்டத்தின் இறுதி பகுதி வரை வெற்றி கரமாக இயங்கிய போதிலும் கடைசி கட்டத்தில் யாரும் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது. இருப்பினும் முயர்சியை விடாமல் 3-வது முறையாக நிலவுக்கு சந்திரயான் 3 அனுப்பபட்டுள்ளது.

சந்திரயான் 3 திட்ட இயக்குநராக விழுப்புரத்தை சேர்ந்த வீர முத்துவேல் இருக்கிறார். இவ்வாறு தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்வெளி துறையில் பல சாதனைகளைப் படைத்துவருகிறார்கள். அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்த இந்த விஞ்ஞானிகள் இன்றைய அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து தமிழர்களுக்கு ஒரு உந்து சக்தியாக உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com