இஸ்ரோவில் ராக்கெட் விண்ணில் ஏவுப்படும் நிகழ்வுகளை வர்ணனை செய்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் இன்று காலமானார்.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 1.2 மில்லியன் ஆகும். இத்தகைய மக்கள் தொகை மிகுந்த நாட்டில் சிலரின் குரலுக்கென தனி அடையாளம் உண்டு. தனித்துவமிக்க குரல்களால் அவர்கள் பிரபலம் அடைந்ததும் உண்டு.
அந்த வகையில் இஸ்ரோவில் ராக்கெட் ஏவப்படும் போது வர்ணனை செய்யும் பெண் குரலுக்கும் தனி ரசிகர்கள் உண்டு. அந்த குரலுக்கு சொந்தக்காரர் விஞ்ஞானி வளர்மதி. இவர் கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய மிக முக்கிய ராக்கெட்டுகளுக்கு மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கராக (வர்ணனையாளராக) பணியாற்றியுள்ளார். ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பு அறிவிக்கப்படும் கவுண்டவுன் விஞ்ஞானிகளை மட்டுமல்ல நம்மையும் பரபரப்பின் உச்சிக்கு கொண்டு செல்லும்.
இத்தகைய குரலுக்கு சொந்தக்காரர் தான் விஞ்ஞானி வளர்மதி. கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய பல முக்கிய ராக்கெட் நிகழ்வுகளில் வர்ணனையாளராக பணியாற்றியவர். கடைசியாக கடந்த ஜூலை 30-ம் தேதி PSLV C562 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபோது அதற்கான கவுண்டவுன், ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது வரையிலான நிலைகள் பற்றி விரிவாக வர்னணை செய்தார்.
50 வயதை கடந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை உயிரிழந்தார். வளர்மதி மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.