அப்பாவானார் கிரிக்கெட் வீரர் பும்ரா.. வைரலாகும் போட்டோ!

பும்ரா
பும்ராVijay Kumar

ஜஸ்பிரித் பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராகவும், மேட்ச் வின்னராகவும் இருப்பவர் பும்ரா. இவர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ளார். ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தொடக்க போட்டியில் பும்ரா அணியில் இடம்பெற்றிருந்தாலும், இரண்டாவது பாதியில் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டதால் பந்து வீச முடியவில்லை.

பின்னர், நேபாளத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகி மும்பை திரும்பியுள்ளார் என்ற செய்தி வெளியானது.

பும்ரா கிரிக்கெட் ஊடகவியலாளர் சஞ்சனா கணேசனை காதலித்து கடந்த 2021 மார்ச் மாதம் திருமணம் முடித்தார்.இந்த நிலையில் இருவருக்கும் அழகான ஆண் குழந்தை மும்பை மருத்துவமனையில் இன்று பிறந்துள்ளது. குழந்தைக்கு அங்கட் என்று பும்ராவும், சஞ்சனாவும் பெயர் வைத்துள்ளார்கள்.

விராட் கோலி – அனுஷ்கா சர்மா, ஹர்திக் பாண்ட்யா – நடாஷா தம்பதியினர் தாங்கள் பெற்றோர் ஆகப் போவதை முன்னரே தெரிவித்திருந்தனர். ஆனால் சஞ்சனாவும், பும்ராவும் இந்த விஷயத்தை மிகவும் ரகசியமாக வைத்து இன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்கள். இதையடுத்து பும்ரா – சஞ்சனாவுக்கு ரசிகர்களும், கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com