
மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டிய அம்சங்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். மகளிர் உரிமைத் தொகையை பெற 1.50 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில் பல லட்சத்திற்கும் அதிகமான மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் ஒரு கோடிக்கும் அதிகமானவருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்ட மக்கள் விண்ணப்பிப்பதற்காக அரசு செப்டம்பர் 18 இன்று முதல் 30 நாட்களுக்கு அவகாசம் வழங்கி இருக்கிறது. ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டவர்கள் கவனிக்கப்பட வேண்டிய காரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சொந்த பயன்பாட்டுக்காக நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது. ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள். ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் உரிமைத் தொகை கிடையாது. உங்களிடம் கார் உள்ளிட்ட வாகனங்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் கணவர், நீங்கள் அரசு வேலையில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி கணக்கு உள்ளதா என்பதை பார்க்கவும். திட்டத்தில் கொடுக்கப்பட்ட வரையறைகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்களுக்கு உரிமை தொகை இல்லை, மாநில, மத்திய அரசு ஊழியர்கள், ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது. ஆகிய காரணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட உரிமை தொகை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.