நாளை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.. எதற்கு தெரியுமா?
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையினை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பலரும் பொது போக்குவரத்தையே நம்பி இருக்கின்றனர். பேருந்தில் ட்ராபிக் அதிகமாக இருப்பதால் பெரும்பாலானோர் எலெக்ட்ரிக் ரயில் அல்லது மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். பொதுவாகவே மெட்ரோ ரயில் இரவு 8 மணி வரை இயக்கப்படும். ஆனால், போக்குவரத்து நெரிசல் ஆகும் சமயங்களில், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நேரங்களில் அவ்வபோது மெட்ரோ நிர்வாகம் ரயில் சேவை நேரத்தை நீட்டிக்கும். அந்த வகையில் தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்படுவதால் பலரும் நாளை ஊருக்கு புறப்படுவார்கள். இதையொட்டி பயணிகளில் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நேரத்தை நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாளை முன்னிட்டு நாளை (15-09-23) ஒரு நாள் மட்டும் மெட்ரோ சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரவு 10 மணி வரை இந்த சேவை நீட்டிக்கப்படும். மேலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் 6 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.