லடாக் கவுன்சில் தேர்தலில் தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி வெற்றி!

லடாக் கவுன்சில் தேர்தலில் தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி வெற்றி!

டாக் யூனியன் பிரதேசத்தில், 26 உறுப்பினர்கள் கொண்ட  கார்கில் மலைக் கவுன்சில் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி பா.ஜ.க.வை வென்றது. 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தலாகும் இதுவாகும்.

தேசிய மாநாட்டுக் கட்சி 11 இடங்களை வென்று தனிப் பெருங்கட்சியாக உள்ளது. காங்கிரஸ் 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களில் வென்றுள்ளனர். பா.ஜ.க. இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன. இந்த தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி  போட்டியிடவில்லை.

இந்த தேர்தலில் தேசியமாநாட்டுக் கட்சி சார்பாக 17 பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் 22 பேரும் களத்தில் குதித்தனர். பா.ஜ.க. 17 இடங்களில்  போட்டியிட்டது. தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஜமைத் உலேமா கார்கில் மற்றும் இமாம் குமைனி நினைவு அறக்கட்டளை  இரண்டும் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த இரண்டு அமைப்புகளும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தன.

தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு காஷ்மீருக்கான சிறந்த அந்தஸ்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் 370 வது பிரிவு ரத்துச் செய்யப்பட்டதையும் ஜம்மு காஷ்மீர், லடாக் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை முன்வைத்தும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது.பா.ஜ.க. 2019-க்குப் பிறகு யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை முன்வைத்து பிரசாரம் செய்தது.

கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 74,026 வாக்காளர்களில் 77.61 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

மக்கள் அளித்த தீர்ப்புக்குப் பின் பதிலளிக்க தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா, தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கூட்டணி பா.ஜ.க.வுக்கு பலத்த அடியை கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மக்கள் அனுமதியில்லாமல், ஜனநாயக விரோத முறையில், அரசியலமைப்புக்கு விரோதமாக செயல்பட்ட சக்திகளுக்கும் அமைப்புகளும் பலத்த அடியாகும் இது என்று தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை மணியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com