தீபாவளி முன்னிட்டு புதிதாய் அறிமுகமாகும் கார்கள்!

தீபாவளி முன்னிட்டு புதிதாய் அறிமுகமாகும் கார்கள்!

தீபாவளியை முன்னிட்டு புதிதாய் அறிமுகமாக உள்ள கார்கள்.

தீபாவளி தமிழ்நாட்டில் மிக முக்கிய பண்டிகை மட்டுமல்ல மிகப்பெரிய வர்த்தக நடவடிக்கையும் கூட. தீபாவளிக்கு இனிப்பு, பலகாரங்கள் தொடங்கி விலை உயர்ந்த கார்கள் வரை சிறப்பு விற்பனை நடைபெறுவது வழக்கம். பண்டிகை காலங்களில் பெரும்பாலான மக்கள் தங்கள் விரும்பிய பொருட்களை வாங்க செலவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பர். மேலும் அந்தக் காலத்தில் கூடுதலான விலை சலுகையையும் நிறுவனங்கள் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள் சிறப்பு சலுகைகள் அளித்து வருகின்றன. மேலும் மக்கள் தங்கள் போனஸ் பணங்களைக் கொண்டும், வருடாந்திர சேமிப்புகளைக் கொண்டும் தங்கள் விரும்பிய பொருட்களை வாங்க செலவிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நேரத்தில் சிட்ரியா நிறுவனம் குறைந்த விலையில் ஏழு பேர் பயணிக்கும் எஸ்யூவி காரை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய மாடலுக்கு சிட்ரியா ஏர் கிராஸ் சி3 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஐந்து சீட் கொண்டவையும், ஏழு சீட் கொண்டவையும் என்று இருவகைகள் உள்ளன. இந்த புதிய காரில் 1.2 லிட்டர் டர்போ எரிபொருள் சேகரிக்கும் வசதி உள்ளது. தற்போது இந்தியாவில் எஸ்யூவி மாடல் கார்கள் அதிகம் விற்பனையாகி வரக்கூடிய நேரத்தில் சிட்ரியாவின் புதிய மாடல் 10 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுவதால் தற்போது அதை வாங்குவதற்கான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.

எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் இந்தியாவின் முன்னிலை வகிக்கும் டாட்டா நிறுவனம். புதுவகை எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய கார் வகையில் ஃப்ரண்ட் பம்பர் வழியாக சார்ஜ் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த புதிய காரில் இரண்டு பேட்டரிகள் உள்ளன. ஒரு பேட்டரி 250 கிலோ மீட்டர் தொலைவையும் மற்றொரு பேட்டரி 350 கிலோமீட்டர் தொலைவையும் அடையும் வகையில் சார்ஜ்களை சேமித்து வைத்திருக்கும். மேலும் நான்கு வீல்களிலும் ஃபாஸ்ட் பிரேக் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரும் 10 லட்சத்திற்கும் கீழ் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com