மழை
மழை

வந்தாச்சு வடகிழக்கு பருவமழை.. மாணவர்கள் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தல்!

Published on

வடகிழக்கு பருவமழை வந்தாலே போதும் ஏதாவது ஒரு நோய் கூடவே வந்துவிடும். அதுவும் குறிப்பாக சென்னையில், சொல்லவே தேவையில்லை. வடகிழக்கு பருவமழை என்றாலே சென்னையில் வெள்ளம் தான். 3 மாத காலம் தண்ணீரிலேயே சென்னை தத்தளிக்கும்.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும், மழை நீர் தேங்குவதால் இது போன்று ஏற்படுகிறது.

இந்த நிலையில், மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,

  1. மழைக்காலங்களில் வரக்கூடிய சிக்கன்குனியா, டெங்கு போன்ற நோய்களிலிருந்து பள்ளி மாணவர்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  2. மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்;

  3. பள்ளி வளாகங்களில் திறந்த வெளி கிணறு, நீர் தேக்கப்பள்ளங்கள், கழிவுநீர் தொட்டிகள் மூடியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்;

  4. பள்ளி வளாகங்களில் விழும் நிலையில் மரம் இருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்;

  5. கட்டிடங்கள், மேற்கூரைகள், கைப்பிடி பகுதிகள் உறுதியாக உள்ளன என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com