
இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களினுடைய கனவாக உள்ள சொந்த வீடு என்ற எண்ணத்தை நினைவாக்கும் விதமாக ஒன்றிய அரசு புதிய கடன் மானிய திட்டத்தை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சொந்த வீடு என்பது மிகப் பெரும்பான்மையான மக்களினுடைய கனவு என்றே சொல்லலாம்.ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கள் வாழ்நாளினுடைய பாதி உழைப்பை சொந்த வீடு வாங்குவதற்காக செலவிடுகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
இப்படி பெரும்பான்மையான மக்களினுடைய கனவாக உள்ள சொந்த வீட்டை மக்களுக்கு நினைவாக்கும் வகையில் அரசு பல்வேறு சலுகைகளை திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒன்றிய அரசு தற்போது புதிய திட்டத்தை நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்றிய அரசு நகர்புற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களினுடைய சொந்த வீடு கனவை நினைவாக்கும் விதமாக கடன் மானியம் வழங்கும் திட்டத்தை இந்த மாத இறுதிக்குள் அமல்படுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் அல்லது தனியார் நிறுவனங்களில் கடன் வாங்கும் கடன் தொகையில் பெரும்பான்மையான பங்கை அரசே செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மானியத்தின் மூலம் மக்களுக்கு பல லட்சம் ரூபாய் மிச்சமாக வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
குறைந்த வருமானமிட்டக்கூடிய மக்களினுடைய நலனை கருதி 2015 ஆம் ஆண்டு அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஆவாஸ் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தினுடைய விரிவாக்கமாக புதிய திட்டம் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கடந்த சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், வீடு வாங்கும் கனவு திட்டத்தில் உள்ள மக்களினுடைய கனவை நிறைவேற்றும் விதமாக புதிய கடன் மானியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சேரிகள், அங்கீகரிக்கப்படாத இடங்களில் வசிக்கும் மக்களினுடைய வாழ்வில் புதிய திருப்பம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.