ரூ‌.16 கோடி மோசடி செய்த வழக்கில் தயாரிப்பாளர் ரவீந்திரன் கைது!

Producer Ravindran arrested.
Producer Ravindran arrested.

திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறி ஏமாற்றி சென்னையை சேர்ந்தவரிடம் போலியான ஆவணங்களைக் காண்பித்து 16 கோடி ரூபாய் பணம் வாங்கி ஏமாற்றியதாக நடிகை மகாலட்சுமியின் கணவரும் தயாரிப்பாளருமான ரவீந்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டது மூலம் பிரபலமாக அறியப்பட்ட நபர் தான் தயாரிப்பாளர் ரவீந்திரன். இவர் மீது ஏற்கனவே சில மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவரிடம் திடக்கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்காக பங்குதாரராக சேர்ந்து கொள்ளுமாறு கூறி ரூபாய் 16 கோடி பெற்று ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து பாலாஜி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், தயாரிப்பாளர் ரவீந்திரன் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் தொடங்குவதாகக் கூறி போலி ஆவணங்களைக் காண்பித்து சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் 15 கோடியே 8 லட்சத்தி 32 ஆயிரம் பெற்றுக்கொண்டு, இந்த திட்டம் தொடர்பாக எதையுமே ஆரம்பிக்காமல், வாங்கி பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியது உறுதியானது.

எனவே தயாரிப்பாளர் ரவீந்திரனை அதிரடியாக போலீசார் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com