புதுச்சேரியில் காலாண்டு தேர்வு டைம் டேபிள் வெளியீடு: எப்போது ஸ்டார்ட் ஆகுது தெரியுமா?

புதுச்சேரியில் காலாண்டு தேர்வு டைம் டேபிள் வெளியீடு: எப்போது ஸ்டார்ட் ஆகுது தெரியுமா?

புதுச்சேரியில் முதன்முறையாக நான்கு பிராந்தியங்களில் உள்ள பள்ளிகளுக்கு பொது காலாண்டு தேர்வு நடைபெறவுள்ளது. செப்டம்பர் மாதம் ஆண்டு தோறும் அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வுகள் நடைபெறும். தேர்வுக்காக காத்திருக்கிறார்களோ இல்லையோ, மாணவர்கள் காலாண்டு விடுமுறைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கெனவே தமிழகத்தில் காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வகுப்புவாரியாக தனித்தனியாக தேர்வு நடைபெறுகிறது. மேலும், காலாண்டு விடுமுறை தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி காலாண்டு தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘முதல்முறையாக புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களில் உள்ள பள்ளிகளுக்கு பொது காலாண்டு தேர்வு நடைபெறவுள்ளது. CBSC பாடத்திட்டத்தின் கீழ் வந்துள்ளதால் முதல்முறையாக புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களில் (புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம்) உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஒரே நேரத்தில் காலாண்டு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், காலாண்டு தேர்வு செப்டம்பர் 21ம் தேதி துவங்கி, 29ம் தேதி முடிகிறது. தொடர்ந்து 30ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் அக்டோபர் 5ம் தேதி இந்த நான்கு பிராந்தியங்களிலும் பள்ளிகள் திறக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1st and 2nd standard:

26.09.2023 - மொழிப்பாடம், 27.09.2023 - ஆங்கிலம், 29.09.2023 - கணிதம்.

3rd standard - 5th standard:

25.09.2023 - மொழிப்பாடம், 26.09.2023 - ஆங்கிலம், 27.09.2023 - கணிதம், 29.09.2023 - இவிஎஸ்.

டைம் டேபிள்
டைம் டேபிள்Vijay Kumar

6th standard to 10th standard:

23.09.2023 - மொழிப்பாடம், 25.09.2023 - ஆங்கிலம், 26.09.2023 - கணிதம், 27.09.2023 - அறிவியல், 29.09.2023 - சமூக அறிவியல்.

டைம் டேபிள்
டைம் டேபிள்Vijay Kumar

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com