சந்திரயான் பத்தி சொல்லுங்க.. ரூ.1 லட்சம் வெல்லுங்க!

சந்திரயான் 3
சந்திரயான் 3Vijay Kumar

சந்திரயான் 3 சரித்திர வெற்றியை கொண்டாடும் விதமாக இந்திய அரசின் சார்பில் வினாடி வினா போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கப்பட்டது. இந்த வெற்றியை நாடே கொண்டாடியது. இந்த நிலையில், சந்திரயான் 3 திட்டத்தைக் கவுரவவிக்கும் விதமாக , இஸ்ரோவுடன் இணைந்து மாபெரும் வினாடி வினா போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது மைகவ்இந்தியா (MyGovIndia) தளம்.

இந்தப் போட்டியில் இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே உடனடியாகக் கலந்து கொள்ள முடியும். இந்தப் போட்டிக்கென மைகவ்இந்தியா உருவாக்கியிருக்கும் இணையதளத்திற்குச் சென்று, நமது மொபைல் எண், பெயர் மற்றும் வீட்டு முகவரி ஆகிய விபரங்களைக் கொடுத்து இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

கேள்விகள் அனைத்தும் சந்திரயான் 3 மற்றும் இஸ்ரோவின் திட்டங்கள் சார்ந்தவையாகவே இருக்கும். மொத்தம் 5 நிமிடங்கள், 10 கேள்விகள். இந்த போட்டியில் பங்கேற்க வேட்பாளர் Mygov-இல் தனிப்பட்ட கணக்கை உருவாக்க வேண்டும். அனைத்து பங்கேற்பாளர்களும் பதிவிறக்கம் செய்யக்கூடிய பங்கேற்பு சான்றிதழை பெறுவார்கள். 5 நிமிடங்களில் பத்து கேள்விகளுக்கு சரியான விடையளிப்பவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.75,000 மற்றும் மூன்றாவது பரிசாக ரூ.50,000 வழங்கப்படுகிறது. அடுத்த 100 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு தலா ரூ.2,000-மும், அதற்கு அடுத்த 200 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு ரூ.1000-மும் பரிசுத்தொகையாக வழங்கப்படவிருக்கிறது. போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் போட்டி இணையதளமான isro quiz பக்கத்திற்கு சென்று 'Participate Now' பட்டனை கிளிக் செய்து பங்கெடுக்கலாம். உடனே போய் அப்ளை பண்ணி பரிசு வெல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com