குஜராத் பாஜகவில் அதிகரிக்கும் சர்ச்சைகளும் முணுமுணுப்பும்!

விபுல் படேல்
விபுல் படேல்

குஜராத் பா.ஜ.க.வில் அதிருப்திக்கும் முணுமுணுப்புக்கும் குறைவில்லை. சமீபத்தில் ஜாம்நகரில் மேயர், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே உருவான மோதல், வாக்குவாதம் ஒருவழியாக முடித்துவைக்கப்பட்ட நிலையில் அமுல் தலைவர் மற்றும் கெடியா மாவட்ட பா.ஜ.க. முன்னாள் தலைவர் விபுல் படேல் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது. அப்போது கட்சியின் செயல்பாடுகுறித்து ராஜ்காட்டிலிருந்து கருத்துகள் வைரலாக வெளிவந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டம்  கரம்சாத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் புதிய அதிநவீன கருவி நிறுவப்பட்டது. அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமுல் தலைவர் விபுல் படேல், இங்குள்ள அனைவரும் நலம் விரும்பிகள் அல்ல. சிலர் நம்மை விரும்புகிறார்கள். சிலர் விரும்பவில்லை. மேலும் சிலர் நமது காலை வாரிவிடவே விரும்புகிறார்கள். நான் கீடா மத்திய வங்கியின் தலைவரானபோது பா.ஜ.க.வை சேர்ந்த சில தலைவர்களும், நண்பர்களும் என்னைக் கண்டு பயந்தனர். கட்சியிலேயே எனது செல்வாக்கை குறைக்க சிலர் முயன்றனர். ஆனால், நான் கீழே விழவும் இல்லை, எனது நம்பிக்கையும் வீண்போகவில்லை. என்னை வீழ்த்த நினைத்தவர்கள்தான் வீழ்ந்தார்கள் என்று விபுல் பேசினார்.

கட்சிக்குள்ளேயே ஒருவர் மற்றொருவரின் காலை வாரிவிட பார்க்கிறார்கள். எதற்கும் லாயக்கில்லாதவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கிறது. திறமையானவர்கள் கட்சியில் ஒதுக்கப்படுகிறார்கள் என்றுகூறியதுடன் இது தொடர்பாக ஒரு கவிதையையும் அவர் பாடினார். அது வைரலானது.

இதுபற்றி ராஜேகோட் பா.ஜ.க. தலைவர் முகேஷ் தோஷி கூறுகையில், சிலர், தங்கள் வருத்த்த்தை வெளிப்படுத்துகிறார்கள், மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் பதவி கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com