அமலாக்கத்துறை இடைக்கால இயக்குநர் ராகுல் நவீன்!

Rahul naveen
Rahul naveen

மலாக்கத்துறை இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மறு உத்தரவு வரும் வரை அல்லது புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை ராகுல் நவீன் பொறுப்பு இயக்குநராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சஞ்சய் குமார் மிஸ்ராவின் நீண்டகால பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் 2023 செப். 15 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதால், அவருக்கு பதிலாக அமலாக்கத்துறை இயக்ககத்தின் சிறப்பு இயக்குநர் ராகுல் நவீன், அமலாக்கத்துறை பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மறு உத்தரவு வரும் வரை அல்லது அமலாக்கத்துறைக்கு முழு அளவிலான இயக்குநர் நியமிக்கப்படும் வரை ராகுல் நவீன் பொறுப்பு இயக்குநராகச் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சய் குமார் மிஸ்ரா 2018 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். 2020 நவம்பரில் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில் மத்திய அரசு அவருக்கு மூன்று முறை பதவி நீட்டிப்பு வழங்கியது.

இதற்காக சிவிசி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. சமீபத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி மிஸ்ரா கடந்த ஜூலை 31 ஆம் தேதியே பதவியிலியிருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும். கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி உச்சநீதிமன்றம், மிஸ்ராவின் பதவிக்காலத்தை செப். 15 ஆம் தேதி வரை நீட்டிக்க ஒப்புக்கொண்டது.

சாதாரண சூழ்நிலையில் இதுபோன்ற விண்ணப்பத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டோம். பொதுமக்கள் நலன் கருதி அமலாக்கத்துறை இயக்குநர் மிஸ்ரா செப். 15 ஆம் தேதிவரை பதவியில் நீட்டிக்க அனுமதிக்கப்படுகிறது என்று உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம்நாத் மற்றும் சஞ்சய் கெளல் ஆகியோர் உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.

எனினும் இனிஎக்காரணம் கொண்டும் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு கோரிக்கையை மத்திய அரசு முன்வைத்தால் அதை ஏற்க மாட்டோம் நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தியிருந்தது. மிஸ்ராவின் பதவிக்காலம் செப். 15 ஆம் தேதி நள்ளிரவில் முடிந்துவிடும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

விசாரணையின் போது மதிப்பாய்வை சமாளிக்க அமலாக்கத்துறைக்கு வேறு திறமையான அதிகாரிகள் இல்லையா என்று கேள்வி எழுப்பியிருந்தது. உங்கள் துறையில் மிஸ்ரா ஒருவர்தான் திறமையானவரா. மற்றவர்கள்  திறமையற்ற அதிகாரிகள் என்று கூறுகிறீர்களா. இது அவர்களின் மன உறுதியை குலைக்காதா என்றெல்லாம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com