ராஜஸ்தான் தேர்தல்: அதிரடியாக களத்தில் இறங்குட் பாஜக, காங்கிரஸ்!

பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்

ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று பா.ஜ.க.வும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அரையிறுதி போட்டிபோல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியைக் கைப்பிடிக்க காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் உத்திகளை வகுத்து வருகின்றன.

இதனிடையே பா.ஜ.க. மூத்த தலைவர்களான அமித்ஷா, ஜே.பி.நட்டா இருவரும் பேரவைத் தேர்தலை சந்திப்பது குறித்து ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை நீண்ட ஆலோசனை நடத்தினர். ஆளும் காங்கிரஸ் கட்சியும் மக்களின் மனநிலை என்ன என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்றாற் போல் செயல்படத் தொடங்கியுள்ளது.

தற்போது உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மக்கள் அதிருப்தியுடன் இருப்பதை அறிந்துகொண்ட காங்கிரஸ் சுமார் 50 எம்.எல்.ஏ.க்களை தேர்தலில் கழற்றிவிட தீர்மானித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதேசமயம் பா.ஜ.க. மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் டிக்கெட் வழங்கும் உத்தியையே ராஜஸ்தானிலும் பின்பற்ற தீர்மானித்துள்ளதாக்க் கூறப்படுகிறது. அதாவது மத்தியப் பிரதேசத்தை போலவே ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலிலும் மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் சிலரையும் களத்தில் இறக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

எம்.பி.க்களை களத்தில் இறக்கினால், அவரது செல்வாக்கின் மூலம் அந்த பகுதியை சுற்றியுள்ள தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பை எதிரொலிக்க முடியும் என்று பா.ஜ.க. கருதுவதாகத் தெரிகிறது.

மக்கள் நலத்திட்டங்களை முன்வைத்து அதன் மூலம் மக்களிடம் வாக்கு கேட்கலாம் என்று முதல்வர் அசோக் கெலோட் நினைக்கிறார். ஆனால், பா.ஜ.க. மோடியின் செல்வாக்கு, காங்கிரஸ் எதிர்ப்பு அலை, வேலையின்மை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு ஆகியவற்றை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியை இழந்தது. இந்த தேர்தலில் எப்படியாவது காங்கிரஸிடமிருந்து ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று பா.ஜ.க. துடிக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் மோடி, ராஜஸ்தானில் சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இப்போதிலிருந்தே  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com