ராஜஸ்தான் தேர்தல் தேதியில் மாற்றம்: நவ. 25ல் வாக்குபதிவு என அறிவிப்பு!

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளில் தேர்தல் ஆணையம் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தபோது ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவித்தது.  இப்போது வாக்குப்பதிவு நவம்பர் 25 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று 2,186-க்கும் மேலான அரசியல் கட்சிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தேர்தல் ஆணையம் இந்த மாற்றங்களைச் செய்துள்ளது.

தேர்தல் நடைபெறும் நாள் நவம்பர் 30 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருமணம் மற்றும் திருமண நிச்சயதார்த்தங்கள் நடத்துவதற்கு ஏற்ற நல்ல நாள் என்பதால் ஏராளமான நிகழ்வுகள், குறிப்பாக ஒரே நேரத்தில், ஒரே நாளில் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு அன்றைய தினம் திருமணம் நடைபெறும்.

திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் மற்றும் வீட்டு நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவர்கள் கலந்துகொண்டால் வாக்குப்பதிவு பாதிக்கப்படலாம். எனவே தேர்தல் தேசிய மாற்றியமைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்திருந்தன. இதையடுத்து தேர்தல் தேதியை மாற்றியமைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தானில் தேர்தல் நவம்பர் 23-க்கு பதிலாக நவம்பர் 25 ஆம் தேதி நடைபெறும் என்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்வதற்கும், ஆதரவு திரட்டுவதற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் வாக்காளர்கள் அதிக அளவில் திரண்டுவந்து வாக்குச் செலுத்தவும் வழியேற்படும். எனினும் மாநில மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க் வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பின்படி தேர்தல் நவம்பர் 25 இல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் செய்ய நவம்பர் 6 ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு பரிசீலனை நவ. 7 இல் நடைபெறும். வேட்பு மனுவை வாபஸ் பெற நவம்பர் 9 கடைசிநாளாலும். டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com