கடன் செலுத்திய நபர்களின் ஆவணங்களை உடனே திருப்பித் தர ரிசர்வ் வங்கி உத்தரவு!
வங்கி மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட நபர் அசல் ஆவணங்களை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதே நேரம் கடன் தொகையை திருப்பி செலுத்திய 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களை சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள் அல்லது கூட்டாக இணைந்தும், வங்கி அல்லது வங்கி அல்லாத நிறுவனத்தில் கடன் பெற முடியும். இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடன் வாங்குபவர்களிடமிருந்து சில அசல் ஆவணங்களை கேட்டு பெருகின்றன.
இந்த நிலையில் பலர் கடன் தொகையை முழுமையாக செலுத்திய பிறகும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அசல் ஆவணங்களை திருப்பித் தர காலதாமதம் செய்வதாகவும், அதற்கு கட்டணம் வசூலிப்பதாகவும் ரிசர்வ் வங்கிக்கு பல குற்றச்சாட்டுகள் வந்தவனும் இருந்தன. இதன் அடிப்படையில் 2003 ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி, வங்கி மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களுக்கு அசல் ஆவணங்களை திருப்பி செலுத்துவதற்கான நடைமுறையை வகுத்து இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது, வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிறுவனங்கள் கடன் பெற்றவரிடம் இருந்து வாங்கிய அசல் ஆவணங்களை கடன் தொகையை திருப்பி செலுத்திய 30 நாளுக்குள் ஒப்படைக்க வேண்டும்.
இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் காலதாமதம் செய்து சட்ட விதிமுறை மீறல். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் காரணமாக அசல் ஆவணத்தை திருப்பி செலுத்த காலதாமதம் ஏற்பட்டால் நாளொன்றிற்கு 5000 ரூபாய் இழப்பீடாக கடன் பெற்ற நபருக்கு வழங்க வேண்டும். மேலும் அசல் ஆவணங்கள் சேதம் அடைந்தாலோ அல்லது பழுதடைந்தாலோ புதிய அசல் ஆவணங்களை பெறுவதற்கான உதவியை செய்ய வேண்டும். இதற்கும் நாளொன்றிற்கு 5000 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.
மேலும் கடன் பெறுபவர்கள் கடன் பெறும்பொழுது போடப்படும் ஒப்பந்த பத்திரத்தில் முழுமையான தகவல்களை தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக அசல் ஆவணங்களை திருப்பி செலுத்துவது உரித்தான விளக்கங்களை அளிக்க வேண்டும்.
அதே சமயம் உரிய காரணங்களோடு இக்கட்டான நேரத்தின் காரணமாக அசல் ஆவணங்களை திருப்பி செலுத்த முடியாவிட்டால் கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் எடுத்துக்கொண்டு அதற்குள் அசல் ஆவணத்தை கட்டாயம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.