
தமிழ்நாடு அரசு சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் ஸ்டாண்ட் அப் டி.என் தளத்தின் மூலமாக புதிய ரியாலிட்டி ஷோ ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த ரியாலிட்டி ஷோ சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மையப்படுத்திய நிகழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தொழில்துறையின் மூலமாக சிறிய தொழில் முனைவோரும் பெரிய வளர்ச்சிகளை அடைய வேண்டும் என்ற வகையில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு சிறு,குறி மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்டங்களையும், தொலைநோக்கு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தற்போது தமிழ்நாடு அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் ஸ்டாண்ட் அப் டி.என் என்ற இணையதளத்தில் பல்வேறு வகையான செயல்பாடுகள், விழிப்புணர்வுகள், பயிற்சிகள் மற்றும் முதலீடு திரட்டுவதற்கான வழிகள், நிதி உதவியை பெறுவதற்கான ஆலோசனைகள், செயல்திறன், தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அறிவு என்று பல்வேறு வகையான தகவல்கள் அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தற்போது ரியாலிட்டி ஷோக்களை மக்கள் அதிகம் பார்க்கின்றனர். இதை உணர்ந்து ஸ்டாண்ட் அப் டி. என் என்ற இணைய பக்கத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி மற்றும் முதலீட்டை பெறுவதற்கான வழிகள், புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துவதற்கான தளம், புதுத் தொழிலை கொண்டு செல்வதற்கான ஆலோசனை, விழிப்புணர்வு மற்றும் தொழில்துறை சார்ந்த சட்டங்கள் என்று பல்வேறு வகையான தகவல்களை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக ரியாலிட்டி ஷோ ஒன்றை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரியாலிட்டி ஷோவின் மூலம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய வளரும் மற்றும் புதிதாக தொழில் தொடங்கியுள்ள, புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள இன்று பல்வேறு நிலையில் உள்ள அனைத்து நபர்களும் பயன்படும் என்றும், இந்த புதிய ரியாலிட்டி ஷோ சிறுகுறி மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் வளர்ச்சியை முக்கியமாக கொண்டு இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு "ஸ்டார்ட் அப் தமிழா" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்டார்ட் அப் தமிழா நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவர்கள் ஸ்டாண்ட் அப் டி.என் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கான நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.