தண்ணீர் தட்டுப்பாடு: பறவைகள் இல்லாத வேடந்தாங்கல்!

தண்ணீர் தட்டுப்பாடு: பறவைகள் இல்லாத வேடந்தாங்கல்!

லகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்களுக்கு பறவைகள் வரும். ஆனால் நடைபாண்டில் சீசன் தற்போது தொடங்கியும் தற்போது வரை பறவைகள் வரவில்லை.

உலகில் பல்வேறு நிலப்பரப்புகளில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள வேடந்தாங்களுக்கு வரும் பறவைகளின் உடைய எண்ணிக்கை அதிகம். தமிழ்நாட்டில் அக்டோபர் இறுதியில் தொடங்கும் மழைக்கால பருவத்தின் போது இனப்பெருக்கத்திற்காக பறவைகள் வேடந்தாங்கலில் ஒன்று கூடும்.

இவ்வாறு லட்சக்கணக்கான பறவைகள் வேடந்தாங்கலில் மரங்கள், குளங்கள் என்ற இயற்கை சூழல்களுக்கு மத்தியில் வாழ்வதற்காக பல ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து வரும். பிறகு மே, ஜூன் மாதங்களில் மீண்டும் தங்கள் சார்ந்த சொந்த நிலப்பரப்பிற்கு அந்த பறவைகள் செல்வது வழக்கம்.இவ்வாறு பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மியான்மர், ஆஸ்திரேலியா, சைபீரியா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வரும்.

அதிலும் குறிப்பாக அருவாள் மூக்கன், வர்ணநாரை, பாம்பு நாரை, சாம்பல் நிற கொக்கு போன்ற பல்வேறு பறவை இனங்கள் அதிகம் வேடந்தாங்களுக்கு வரும். ஆனால் தற்போது போதிய மழை இல்லாததால் வேடந்தாங்கலில் உள்ள குளங்கள், நீர் தேக்கங்கள் போதிய அளவு நீர் இல்லாமல் காணப்படுகின்றன. இதனால் தற்போது வரை நடப்பாண்டிற்கான சீசன் தொடங்கவில்லை. இதனால் பறவைகள் வரத்து இன்னும் தொடங்கவில்லை.

அதே நேரம் வனவிலங்கு ஆர்வலர்கள் இன்னும் சில வாரங்களில் தமிழ்நாட்டில் சிறிய அளவிலான மழைகள் பதிவாகும். இதனால் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சுற்றியுள்ள வேடந்தாங்கல் பகுதியில் நீர் வரத்து அதிகரிக்கும். இதனால் சில வாரங்களில் பறவைகள் வரத்து தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்த வகையான மாற்றங்கள் ஏற்பட்ட கூடும் என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com