
ஆதாரை 10 வருடத்திற்கு ஒருமுறை அப்டேட் செய்ய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இதற்காக பொதுமக்கள் தாங்களாகவே போன் மூலமாக ஆதாரில் மாற்றம் செய்யும் எளிய நடைமுறை செயல்பாட்டில் உள்ளது.
இந்தியாவில் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுவது ஆதார். இந்திய மக்கள் அனைவருக்கும் ஆதார் வழங்கப்பட்டுள்ளதால் பிரதான அடையாள அட்டையாக ஆதார அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் எல்லா வகையான சான்றுகளுக்கும் ஆதார் எண் இணைக்கப்படுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆதாரில் எந்தவித பிழையும், தவறும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.
மேலும் ஆதார் அனைத்து வயது உடையவர்களுக்கும் வழங்கப்படுவதால் வயது உயர்வின் காரணமாக முக மாற்றம் ஏற்படுகிறது ஆனால் பெரும்பான்மையானோர் ஆதாரில் புகைப்படத்தை பெருமளவில் மாற்றுவது கிடையாது. மேலும் பலர் குடியிருப்புகளை மாற்றுகின்றனர். தொலைபேசி எண்களை மாற்றுகின்றனர் இப்படி புதிய தகவல்களை ஆதாரில் மக்கள் பெருமளவில் பதிவேற்றம் செய்வதே கிடையாது. ஆதாரை வாங்கியது முதல் எந்தவித புதிய தகவல்களையும் பதிவேற்றம் செய்யாமலேயே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் மத்தியில் அரசு 10 வருடத்திற்கு ஒருமுறை ஆதாரில் அப்டேட் செய்ய அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் ஒவ்வொரு குடிமக்களும் ஆதாரப் பெறுவதுடன் நின்றுவிடாமல் 10 வருடத்திற்கு ஒருமுறை ஆதாரில் அப்டேட்டுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இதற்காக அரசின் சார்பில் இ சேவை மையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஆதார் மையம் அமைக்கப்பட்டு அப்டேட் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இதற்கான கால அவகாசம் தற்போது மீண்டும் நீடிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 14ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த அவகாசம் தற்போது மேலும் நீடிக்கப்பட்டு செப்டம்பர் 30ம் தேதி வரை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தேதிக்குள் ஆதாரில் மாற்றங்களை செய்ய விரும்புவர் செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் பொதுமக்கள் தாங்களாகவே ஆதாரில் அப்டேட்டுகளை செய்யும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக UIDAIயின் https://myaadhaar.uidai.gov.in/ என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய பக்கத்திற்கு சென்று மை ஆதார் என்கிற பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும். பிறகு ஆதார் புதுப்பிப்பு என்ற பட்டனை தேர்வு செய்ய வேண்டும். பிறகு ஆதாரில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு வரக்கூடிய ஓடிபி பதிவு செய்ய வேண்டும்.
தொடர்ச்சியாக ஆதார் புதுப்பிப்பு புள்ளி விவரம் என்பதை கிளிக் செய்து ஆதாரில் செய்ய வேண்டிய மாற்றங்களை பதிவு செய்ய வேண்டும். பிறகு பதிவை உறுதி செய்துவிட்டு, யூ ஆர் என் மூலமாக அப்டேட்டின் நிலையை தெரிந்து கொள்ள முடியும்.