அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்தே சிலர் கட்சி மாறினர் அஜித் பவார் மீது சரத்பவார் மறைமுக தாக்கு!

சரத் பவார்- அஜித் பவார்
சரத் பவார்- அஜித் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள், அமலாக்கத்துறை சோதனை, விசாரணக்கு பயந்தே ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்ந்துவிட்டனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பாவர் கூறினார்.

 தமது உறவினர் அஜித்பவார் மற்றும் 8 எம்.எல்.க்கள் சமீபத்தில் கட்சியிலிருந்து பிரிந்து சென்று மகாராஷ்டிரத்தில் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-பா.ஜ.க. ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்ந்ததை அவர் மறைமுகமாக குறிப்பிட்டார். மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான் நாங்கள் ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்ந்தோம் என்று அஜித்பவார் கோஷ்டி கூறுவதில் உண்மையில்லை என்றும் அவர் கூறினார்.

புனேயில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சமூக ஊடகப் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் தொண்டர்களிடையே சரத் பவார் பேசினார்.அப்போது அவர் கூறுகையில், கடந்த காலங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. சிலர் எங்கள் கட்சியை விட்டு வெளியில் சென்றனர். அதை மறுக்கவில்லை. ஆனால், இப்போது அஜித்பவார் தலைமையில் ஒரு கோஷ்டியினர் வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான் ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்ந்தோம் என்று கூறுவது உண்மையில்லை.

மத்திய அரசு அவர்கள் மீது ஊழல்புகார் தெரிவித்து, அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்துவோம் என்று மிரட்டியதை அடுத்தே அவர்கள் எல்லோரும் (அஜித்பவார் கோஷ்டியினர்) ஆளும் பா.ஜ.க.-சிவசேனை கூட்டணியில் சேர்ந்தனர். நீங்கள் எங்களிடம் வராவிட்டால், வேறு இடத்திற்கு போகவேண்டியிருக்கும் (சிறைக்கு) என்று பா.ஜ.க.வினர் மிரட்டியதாலேயே அவர்கள் அணிமாறியுள்ளனர் என்றார் சரத்பவார்.

எனினும் ஒருசிலர் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர் (முன்னாள் உள்துறை அமைச்சர்) அனில் தேஷ்முக். அவர் ஏறக்குறைய 14 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். கட்சிமீதான விசுவாசத்தை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதையும் மறுத்து அவர் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உறுதியாக நிற்கிறார் என்றார் பவார்.

சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து அஜித்பவாரும் 8 எம்.எல்.ஏ.க்களும் பிரிந்து சென்று பா.ஜ.க.-சிவசேனை ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்ந்தனர். இதையடுத்து அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. மற்ற 8 பேரும் அமைச்சர்களாயினர்.எதிர்க்கட்சியினரை மிரட்டி தங்கள் பக்கம் இழுப்பதை விட்டுவிட்டு ஆளுங்கட்சியினர் மக்கள் பிரச்னைக்கு தீர்வுகாண்பதில் கவனம் செலுத்த வேண்டும் சரத் பவார் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com