மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு:போட்டித் தேர்வுக்கு தடை விதித்த மாவட்ட நிர்வாகம்!

மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு:போட்டித் தேர்வுக்கு தடை விதித்த மாவட்ட நிர்வாகம்!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் பல்வேறு வகையான போட்டி தேர்வு மையங்களில் பயிற்சி பெரும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர். இதை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பயிற்சி மையங்களில் அடுத்த இரண்டு மாதத்திற்கு எந்த வகையிலான பயிற்சி தேர்வுகளும் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நீட், ஜே இ இ உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போட்டித் தேர்வு பயிற்சிகளை தனியார் பயிற்சி நிறுவனங்களின் மூலம் பெற்று வருகின்றனர்.

மேலும் ராஜஸ்தான் மட்டுமல்லாது மகாராஷ்டிரா, பீகார், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோட்டா மாவட்டத்தின் போட்டி தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெரும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை கொள்ளும் நிலை அதிகரித்து இருக்கிறது. நடப்பு ஆண்டில் மட்டும் 23 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது மாநில முழுவதும் மிகப் பெரிய அதிர்வலை ஏற்படுத்தி இருக்கிறது.

கோட்டா மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் மகாராஷ்டிராவை சேர்ந்த 16 வயது மாணவர் பயிற்சி மையத்தில் நடைபெறும் வாராந்திர தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

அதேபோல் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதான மாணவர் பயிற்சி தேர்வு மையத்தின் டெஸ்ட் எக்ஸாமில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்படி அடுத்தடுத்து தொடரும் தற்கொலைகளை தடுக்கும் விதமாக கோட்டா மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களிலும் அடுத்த இரண்டு மாதத்திற்கு எந்தவித தேர்வு நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் ஸ்ப்ரிங் வடிவிலான மின்விசிறிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் அசோக் கெலாட் போட்டித் தேர்வு குறித்து முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள குழு ஒன்றை அமைத்துள்ளார். மேலும் மாணவர்களுக்கான மனநல ஆலோசனை, தன்னம்பிக்கை பயிற்சி வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com