மாணவர்களுக்கு ஜாலியான நியூஸ்:காலாண்டு விடுமுறை அறிவிப்பு!

மாணவர்களுக்கு ஜாலியான நியூஸ்:காலாண்டு விடுமுறை அறிவிப்பு!

மிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நாட்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் பள்ளி காலாண்டு விடுமுறை செப்டம்பர் மாத இறுதியில் விடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வு தேதி மற்றும் விடுமுறை தேதி குறித்து எதிர்பார்ப்பு நீடித்து வந்தது. இந்த நிலையில் விடுமுறை குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 11, 12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்படுகின்றன.
 
செப்டம்பர் 27-ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்த பின்,  28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

குறைந்தது 10 நாட்களாவது காலாண்டு விடுமுறை கிடைக்கும் என மாணவ, மாணவிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதில் பாதி மட்டுமே விடுமுறையாக கிடைத்திருக்கிறது. இதன்மூலம் செப்டம்பர் 2023ல் அரசு பள்ளிகளின் வேலை நாட்கள் என்பது 18ஆக அமைந்துள்ளது. இதுதவிர செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 16ஆம் வரையிலான காலகட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com