நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் உறுப்பினர்களினுடைய சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றம் மக்களவை மாநிலங்களவை என்று இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறது. இந்த இரண்டு பிரிவுகளிலும் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் தேர்தலின் பொழுது சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தின் மூலம் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (The Association for Democratic Reforms (ADR)) பல்வேறு ஆய்வுகளை செய்து தரவுகளை திரட்டி உள்ளது.

இந்த நிலையில் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவு முடிவுகள், நாடாளுமன்றத்தின் இரு அவையைச் சேர்ந்த உறுப்பினர்களின் 763 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் பெரும் பணக்காரர்கள் என்று எடுத்துக்கொண்டோம் என்றால் 53 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர். மேலும் 763 நாடாளுமன்ற உறுப்பினரினுடைய மொத்த சொத்து மதிப்பை கணக்கிட்டால் 29 ஆயிரத்து 251 கோடி ரூபாய் வருகிறது.

குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 385 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு 7,051 கோடி ரூபாய் ஆகும். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினுடைய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய சொத்து மதிப்பு 6,136 கோடியாகவும். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 31 நாடாளுமன்ற உறுப்பினர் சொத்து மதிப்பு 4,766 கோடி ரூபாயாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 81 நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய சொத்து மதிப்பு 3,169 கோடி ஆகும். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு 1,318 கோடி ஆகும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், அதிக பணக்கார நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநிலமாக தெலுங்கானா முதல் இடத்தை பிடிக்கிறது. மற்றும் ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடிக்கின்றன.

மேலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த 763 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 36 பேர் மீது குற்ற வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளது. அதிலும் 194 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றம் போன்ற கடுமையான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதிக குற்ற வழக்குகளைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் கட்சியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முதலிடத்திலும் ராஸ்ட்ரிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com