பருப்பு வகைகள் கடும் விலை உயர்வு !

பருப்பு வகைகள்
பருப்பு வகைகள்

நாடு முழுவதும் பருப்பு வகைகளினுடைய விலை வரலாறு காணாத அளவில் விலை உயர்வை சந்தித்து இருக்கிறது. தேவை அதிகரித்து இருப்பதும் கையிருப்பு குறைந்து இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

மழைக்காலத்தில் பயிரிடப்பட்டு பனிக்காலத்தில் துவரம் பருப்பு அறுவடை செய்யப்படுகிறது. கடந்தாண்டு பருவநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக விளைச்சல் குறைந்த அறுவடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நாட்டில் தற்போது கையிருப்பு உள்ள பருப்பின் அளவு குறைந்து வருவதால் துவரம் பருப்பு மற்றும் பல்வேறு வகையான பருப்பு வகைகளினுடைய தட்டுப்பாடு நாடு முழுவதும் அதிகரித்திருக்கிறது.

மேலும் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மட்டும் ஜூலை மாதம் வரையில் மட்டும் 25 சதவீதம் பருப்பு வகைகளினுடைய விலை உயர்ந்திருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக தற்போது பருப்பு வகைகளின் தட்டுப்பாடு மேலும் அதிகரித்து உள்ளது. தேவைக்கு ஏற்ப பருப்பு கையிருப்பு இல்லாததால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

குறிப்பாக துவரம் பருப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30 ரூபாய் விலை உயர்ந்து இருக்கிறது. இதனால் சிறுக சிறுக பொருட்களை வாங்கி பயன்படுத்தும் மக்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு கடந்த வாரத்தில் 150 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட துவரம் பருப்பு தற்போது 180 முதல் 190 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 50 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை சிப்பம் தற்போது 100 ரூபாய் விலை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொண்டைக்கடலை 70 ரூபாய்க்கும், பொட்டுக்கடலை 80 ரூபாய்க்கும், உளுந்து 120 ரூபாய் முதல் 140 ரூபாய்க்கும், பாசிப்பருப்பு 115 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் அறுவடை செய்ய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் இந்த வருடத்தின் இறுதி வரை பருப்பு வகைகளுடைய விலை குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் நடப்பு ஆண்டிலும் துவரம் பருப்பினுடைய விளைச்சல் குறைவாகவே காணப்படும் என்று சொல்லப்படுகிறது. பருவநிலை மாற்றத்தினுடைய தாக்கம் இந்தாண்டும் எதிரொளிப்பதால் பருப்பு விளைச்சல் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பருப்பு வகைகளின் உற்பத்தி என்பதை 2 முதல் 4 சதவீதம் மட்டுமே, மீதி 96 சதவீதம் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற அன்டை மாநிலங்களினுடைய விளைச்சலை நம்பி நம்பியே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com