சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியினுடைய நீர் தேவை உணர்ந்து. ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை திட்டத்தை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாடு சென்னையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு தமிழ்நாடு அரசு சென்னையினுடைய குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதாக பல்வேறு எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை என்ற திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் நகர்புற நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு நேற்றைய தினம் தொடங்கி வைத்தார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள சிறப்பு பள்ளியில் அமைச்சர் கே. என். நேரு ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை திட்டத்தை தொடங்கி வைத்து பேசியது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஏரிகள், குளங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், செயல்பாடுகளை உள்ளடக்கி இந்த திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் பாதுகாக்கப்பட உள்ளன. எதிர்காலத்தினுடைய நீர் தேவையை உணர்ந்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும், பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவும்.
நெதர்லாந்து அரசு உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் குடிநீர் திட்ட பணிகளுக்காக 40 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கி உள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வசதிகளை தடையின்றி கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சி பகுதியில் ஒரு நாளைக்கு 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இதன் மூலம் 85 லட்சம் மக்கள் பயனடைகின்றனர். பிற மாவட்டங்களில் 544 கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் 12 மாநகராட்சிகள், 67 நகராட்சிகள், 344 பேரூராட்சிகள், 52,32 9 ஊரக குடியிருப்புகளில் வாழும் 4. 53 கோடி மக்கள் பயனடைகின்றனர் என்று தெரிவித்தார்.