எகிறிய வேகத்தில் சர்ரென குறைந்தது தக்காளி விலை.. ஒரு கிலோ ரூ.7 தான்!

தக்காளி
தக்காளிவிஜி

டந்த மாதம் டபுள் செஞ்சுரி அடித்த தக்காளி விலை தற்போது மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.7க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் விளைச்சல் குறைவின் காரணமாக கடந்த மாதம் முழுவதும் காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது.

அதுவும் குறிப்பாக தக்காளியின் விலை சாமானிய மக்கள் வாங்க முடியாத நிலைக்கு இருந்தது. சிலர் பிரியாணி வாங்கினால், ஆடை வாங்கினால் எல்லாம் தக்காளியை இலவசமாக வழங்கி வந்தனர், அந்த அளவிற்கு ஒரு கிலோ தக்காளி டபுள் செஞ்சுரியை தாண்டி விற்பனையானது. அனைத்து உணவிற்கும் தக்காளி தேவைப்படுவதால் பொதுமக்கள் மிகவும் திணறினர்.

வெறும் தக்காளியை மட்டுமே விற்பனை செய்து கோடீஸ்வரர் ஆனவர்கள் இருந்தனர். இப்படி தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருந்தது. இந்த நிலையில் இன்று தக்காளி விலை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் ரூ.7க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சில்லரை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.18க்கு விற்பனைச் செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் தக்காளி வரத்துக்கு கஷ்டப்பட்ட நிலையில், இப்போது தக்காளி விற்கமுடியாமல் திணறி வருகின்றனர்.

தக்காளியை இவ்வளவு குறைந்த விலைக்கு விற்பதால், கூலி மற்றும் போக்குவரத்து கட்டணம் வசூலிக்க முடியாது என்பதை உணர்ந்த விவசாயிகள், கிராமங்களில் உள்ள சாலைகளிலோ, திறந்த வெளியிலோ கொட்டிவிடுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com