அவைத்தலைவர் நீக்கிய பிரதிநிதிகள்..அமெரிக்க அரசியலில் பரபரப்பு!

Kevin McCarthy
Kevin McCarthy

மெரிக்காவின் நாடாளுமன்ற கீழவையின் தலைவராக செயல்பட்டு வரும் குடியரசு கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தியை அதே கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் நீக்கம் செய்யவேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானம் வெற்றிபெற்றதை அடுத்து அவைத் தலைவர்கள் பொறுப்பிலிருந்து மெக்கார்த்தி நீக்கம் செய்யப்பட்டார்.

அமெரிக்க நாடாளுமன்றம் கீழவை, மேலவை என்ற இரு அவைகளை கொண்ட அமைப்பாகவும். தற்போது அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயக கட்சி ஆட்சியில் உள்ளது. அதே சமயம் ஜனநாயக கட்சி மேலவையான செனட் சபையில் மட்டும் 51 உறுப்பினர்களைக் கொண்டு பெரும்பான்மையோடு உள்ளது. ஆனால் கீழவையில் குடியரசு கட்சியே 221 பிரதிநிதிகளுடன் பெரும்பான்மையோடு உள்ளது. ஜனநாயக கட்சிக்கோ 212 பிரதிநிதி மட்டுமே உள்ளனர்.

இதனால் ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயக கட்சி கீழவையில் கொண்டு வரக்கூடிய தீர்மானங்கள் பல நேரங்களில் நிறைவேற்றப்படுவதில்லை. இந்த நிலையில் கீழவைத் தலைவராக செயல்படும் குடியரசு கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக தற்போது செயல்பட்டு வருவதாக தீவிரமாக குற்றம் சாட்டப்பட்ட வந்தது.

இந்த நிலையில் குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் தங்கள் கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தியை அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 216 வாக்குகளும், எதிராக 210 வாக்குகளும் பதிவானது‌. இதை அடுத்து அவைத் தலைவர் கெவின் மெக்கார்த்தி அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அவைத்தலைவரை நீக்குவது அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து குடியரசு கட்சியினர் கீழவையில் ஜனநாயக கட்சிக்கு எதிரான தீவிர மனநிலையைக் கொண்டவரை அவைத் தலைவராக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com