சாதனை படைக்கும் ஒவ்வொரு சந்திராயன் பின்னும் ஒரு வீர தமிழன் இருந்து வருகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?
சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய நிலையில் இந்த விண்கலத்தை உருவாக்கியதற்கு பின்னால் ஒரு சாதனை தமிழனின் மிக முக்கியமான பணி இருக்கிறது. இவரது தலைமையில்தான் விஞ்ஞானிகள் இந்த மிகப்பெரிய உலக சாதனையை செய்துள்ளனர். அவர் தான் வீர முத்துவேல்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இன்று உலக வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்றை பதித்துள்ளது. நிலவின் தென் துருவ பகுதியில் வெற்றிகரமாக ஒரு விண்கலத்தை சாஃப்ட் லேண்டிங் செய்துள்ளது. பல உலக நாடுகள் முயற்சித்து முடியாத இந்த காரியத்தை இஸ்ரோ வெற்றிகரமாக சாதித்துக் காட்டியுள்ளது. இன்று இஸ்ரோவின் இந்த சாதனையை உலக நாடுகள் எல்லாம் வியந்து பாராட்டி வருகின்றனர்.
இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்திற்கு இயக்குனராக இருந்தவர் வீர முத்துவேல் இவர் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்தவர்.
வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே துறையில் ஒரு டெக்னீசியனாக பணியாற்றியவர். இதனால் இவர்கள் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே கோட்ரஸில் தங்கி இருந்தனர். விழுப்புரம் ரயில்வே பள்ளியில் படித்தார். பின்னர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றவர் விண்வெளி ஆய்வில் ஆர்வம் இருந்ததால் சென்னை தாம்பரம் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை ஐஐடியில் மேல்படிப்பு படித்து, ஏர்ஸ்பேஸ் துறையில் முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டார்.
கடந்த 1989 ஆம் ஆண்டு இவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். இவர் பணியில் சேர்வதற்கு முன்பு மத்திய மாநில அரசுகளிலிருந்து பல்வேறு வேலை வாய்ப்புகள் வந்தாலும் அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு விண்வெளி ஆய்வில் இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக இவரை பணியை ஏற்றுக் கொண்டார்.
பின்பு படிப்படியாக முன்னேறி சந்திரயான் 2 திட்டத்தில் பல முக்கியமான பணிகளை இவர் பொறுப்பேற்று செய்தார். இந்நிலையில் சந்திரயான் 2 வெற்றிகரமாக அமையவில்லை என்றாலும் இவரது பணி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இதை பார்த்த இஸ்ரோ நிர்வாகம் இவரை சந்திரயான் 3 திட்டத்திற்கு இயக்குனராக அறிவித்தது.
தற்போது இந்த சந்திரயான் 3 திட்டத்தை வெற்றி கரமாக செயல்படுத்தியதற்கு பின்பு இவர் முக்கிய பங்காற்றினார். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வார்த்தைக்கு ஏற்ப நிலவில் தடம் பிடிக்க சந்திரயான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியலும் ஒவ்வொரு தமிழர்கள் உள்ளனர்.
சந்திரயான் 1 - மயில்சாமி அண்ணாதுரை
சந்திரயான் 2 - வனிதா
சந்திரயான் 3 - வீரமுத்துவேல்
இப்படி இந்தியா எத்தகை வளர்ச்சியடைந்தாலும் அதில் தமிழர்கள் பங்காற்றுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை... வாழ்க இந்தியா வாழ்க தமிழ்நாடு...