தல தோனி கிடாருடன் நடனம் “ஜாலிலோ ஜிம்கானா” !

தல தோனி கிடாருடன் நடனம் “ஜாலிலோ ஜிம்கானா” !

விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற “ஜாலிலோ ஜிம்கானா” பாடலுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கிடாருடன் நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக தோனி ஆன முதல் நாளிலிருந்தே "தல" தோனிக்கென தமிழ் நாட்டில் தனி ரசிகர் படையே இருந்து வருகிறது. "தல" தோனியும் எப்போது தமிழகத்திற்கு வந்தாலுமே உற்சாக மூடிற்கு வந்து விடுவது வழக்கம் தான்.

அந்த வீடியோவில் நடிகர் விஜய் நடித்து இயக்குனர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள “ஜாலிலோ ஜிம்கானா” பாடலுக்கு கிடார் வாசித்துக் கொண்டே தோனி நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடர் பயிற்சிக்காக இந்த மாதத்தின் தொடக்கத்தில் சென்னை வந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மலர் தூவி உற்சாகமான வரவேற்பு அளித்தனர். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தோனியும் அவரது சகாக்களும் நெட் ப்ராக்டிஸ் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தோனியின் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு .பரவலாக பகிரப்பட்டு வருகிறது .அந்த வீடியோவில் கையில் கிடாருடன் தோனி மற்றும் சக அணி வீரர்களான ஷிவம் தூபே, தீபக் சஹார், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நடனமாடினர். இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தோனியின் ரசிகர்கள் இதனை பார்த்து உற்சாக வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com