நாளை மறுநாள் சென்னை குடிநீர் குறைதீர் கூட்டம்!

நாளை மறுநாள் சென்னை குடிநீர் குறைதீர் கூட்டம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

சென்னை, குடிநீர் வாரியம் சார்பில் பொதுமக்களின் குறை தீர்க்கும் கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த மாதத்துக்கான குறை தீர் கூட்டம் நாளை மறுநாள் (10.6.2023) சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து பகல் 1 மணி வரை அனைத்துப் பகுதி குடிநீர் வாரிய அலுவலங்களிலும் நடைபெற உள்ளது.

இந்தக் குறை தீர்க்கும் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன் பெறும் வகையில், ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இந்தக் கூட்டங்கள் நடத்தப்படும்.

அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டல அலுவலகங்களில் இந்த குறைதீர் கூட்டம் நடைபெறும் இடங்களின் விவரம்: மண்டலம் 1 – திருவொற்றியூர், மண்டலம் 2 – மணலி, மண்டலம் 3 – மாதவரம், மண்டலம் 4 – தண்டையார்பேட்டை, மண்டலம் 5 – ராயபுரம், மண்டலம் 6 – திருவிக நகர், மண்டலம் 7 – அம்பத்தூர், மண்டலம் 8 – அண்ணாநகர், மண்டலம் 9 – தேனாம்பேட்டை, மண்டலம் 10 – கோடம்பாக்கம், மண்டலம் 11 – வளசரவாக்கம், மண்டலம் 12 – ஆலந்தூர், மண்டலம் 13 – அடையாறு, மண்டலம் 14 – பெருங்குடி, மண்டலம் 15 – சோழிங்கநல்லூர்.

இந்தக் குறை தீர்க்கும் கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் பகுதி குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பிரச்னைகள், வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் இருக்கும் குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் குறித்தான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாகத் தெரிவித்து பயன்பெறலாம். அது மட்டுமின்றி, மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விவரங்களையும் இந்தக் கூட்டத்தின் மூலம் நீங்கள் அறியலாம்.

logo
Kalki Online
kalkionline.com