#BREAKING ஐபிஎல் 2026: மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்.!!

இன்றைய 8-வது லீக் போட்டியில் மும்பை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.
Delhi VS Mumbai
Delhi VS Mumbaiimage credit-indianexpress.com
Published on

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இன்றைய முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.

இரு அணிகளும் இருவரை தனது முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. 2-வது வெற்றியை தொடர இரு அணிகளும் தீவிரம் காட்டும்.

இவ்விரு அணிகளும் இருவரை 37 முறை நேருக்கு நேர் மோதியதில் 21-ல் மும்பையும், 16-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸில் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய மும்பை அணி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

அதனை தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி அதிரடியாக விளையாடி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com