மீண்டும் பொதிகையில் ஒலியும், ஒளியும்.. இனி டிடி தமிழ் என பெயர் மாற்றம்!

பொதிகை
பொதிகை
Published on

டிடி பொதிகை தொலைக்காட்சியின் பெயர் பொங்கல் முதல் மாற்றப்படவுள்ளதாக அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மிக பழமையான தொலைக்காட்சி சேனலில் ஒன்று தான் பொதிகை. 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தில்லியில் ஒரு சிறிய அலைபரப்பியுடனும் ஒரு தற்காலிக அரங்கத்துடனும் தனது சோதனை ஒளிபரப்பைத் தொடங்கியது. 1965 ஆம் ஆண்டு அனைத்திந்திய வானொலியின் ஒரு பகுதியாக பிரதிமா பூரி படித்த ஐந்து நிமிட செய்தி தொகுப்புடன் வழக்கமான தினசரி ஒலிபரப்பும் தொடங்கியது. சல்மா சுல்தான் 1967 இல் தூர்தர்ஷனில் சேர்ந்து முதல் செய்தித் தொகுப்பாளரானார்.

தூர்தர்ஷன் தொலைக்காட்சி என்பது இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு இந்திய பொது சேவை ஒளிபரப்பாகும். இது தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு சொந்தமானதும் பிரசார் பாரதியின் இரண்டு பிரிவுகளில் ஒன்றுமாகும்.கிட்டத்தட்ட இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் மேல் ஆன நிலையில், தற்போது அது மீண்டும் பொலிவு பெறவுள்ளது. அனைவரும் டிஜிட்டல் காலத்தை நோக்கி ஓடுவதால் தொலைக்காட்சியை காணுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறாது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கை குறித்து தெரிவித்தார்.

முன்பு அனைவரும் டிடி பொதிகை தொலைக்காட்சியில் ஒலியும், ஒளியும் பார்த்து கொண்டு இருந்தோம். தற்போது டிடி பொதிகையில் மீண்டும் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளோம். ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் முதல் டிடி பொதிகை என்ற தொலைக்காட்சியின் பெயர் டிடி தமிழ் என மாற்றப்படவுள்ளது என தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com