சவுதியில் ட்வீட் செய்தவருக்கு மரண தண்டனை. அப்படி என்ன செய்திருப்பார்?

Death penalty for tweeter in Saudi.
Death penalty for tweeter in Saudi.

சவுதி அரேபியாவில் ஒருவர் போட்ட ட்வீட்டுக்கு ரீட்வீட் செய்து, யூடியூப் தளத்தில் தன்னுடைய கருத்தை பகிர்ந்ததற்காக ஒரு நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

உலகிலேயே அதிக மரண தண்டனை விதிக்கும் நாடுகளான சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா உள்ளது. இங்கு மதத்திற்கு எதிராக பேசுவதோ அல்லது எழுதுவதோ மன்னிக்க முடியாத குற்றமாகும். கடத்தல், போதைப் பொருள் உள்ளிட்ட விஷயங்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் ஒரு நபர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் சவுதி அரசுக்கு எதிரான பதிவுகளை தொடர்ந்து மறு பதிவு செய்து வந்துள்ளார். அத்துடன் யூடியூப் தளத்திலும் சவுதி அரசுக்கு எதிராக பல கருத்துக்களைத் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இவர் மதங்களுக்கு எதிராக செயல்பட்டதாகவும், சமூக பாதுகாப்பை சீர்குலைத்து விட்டதாகவும், சவுதி அரசாங்கத்திற்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்டு விட்டதாகவும், பட்டத்து இளவரசரையே அவதூறாகப் பேசிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாழ்க்கை விசாரித்த நீதிபதி அந்த நபருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். 

நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டு அதிர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒருவர் மறுபதிவு செய்ததற்கெல்லாம் மரண தண்டனையா? என்று கொந்தளித்தபடி மனித உரிமை ஆராய்ச்சியாளர் ஜோய் ஷியா என்பவர் கூறினார். இதுகுறித்து மேலும் பேசிய லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், "ட்வீட் செய்வதற்கெல்லாம் மரண தண்டனை வழங்குவது கொடூரமானது. சவுதி அரேபியாவில் அதிகரித்து வரும் அடக்குமுறைக்கு இது மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்" என்றார். 

இதற்கு முன்னதாகக் கூட டாக்டர் பட்டம் பெற்ற ஒரு மாணவிக்கு, சவுதி அரேபியா அரசுக்கு எதிராக பேசிய குற்றத்திற்காக 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மாணவி சிறை தண்டனை அனுபவித்து வருவதற்கே கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இப்போது ட்வீட் செய்வதற்கு மரண தண்டனை என்பது சவுதியின் அடக்குமுறை ஆட்சியை எடுத்துரைப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  

சவுதி அரேபிய அரசு குடும்பத்திற்கு எதிராக செயல்படுவோரை ஒடுக்குவதற்கு, இதுபோன்ற கடுமையான தண்டனைகள் கை கொடுக்கும் என நம்பப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com