கடற்கரை - எழும்பூர் 4வது ரயில் பாதை திட்டத்தை மாற்றி அமைக்க முடிவு!

கடற்கரை - எழும்பூர் 4வது ரயில் பாதை திட்டத்தை மாற்றி அமைக்க முடிவு!
Published on

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியா மற்றும் தென்னகத்தின் பல பகுதிகளுக்கும் ரயில்கள் புறப்படுவதால் இங்கு மிகவும் இட நெருக்கடி காணப்பட்டதால், எழும்பூரில் இருந்தும் பல ரயில் இயக்கப்படுகின்றன. ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக கடற்கரை – எழும்பூர் இடையே நான்காவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் 96.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தை துரிதமாகச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதைத் தொடர்ந்து, வேளச்சேரி – சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல், அடுத்த ஏழு மாதங்களுக்கு சேப்பாக்கம் வரை மட்டுமே இயக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வழித்தடத்தில் ஐடி தொழிலாளர்கள் பலரும் தினமும் சென்று வருவதனால் இதற்கு பலத்த எதிர்ப்பு வலுத்தது. அதைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தெற்கு ரயில்வேயின் கோட்ட அதிகாரிகள் ஆலோசனை செய்து வந்தனர். அதையடுத்து, வரும் 1ம் தேதி முதல், மேம்பால ரயில் சேவையின் ஒரு பகுதி ரத்து செய்யும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், கடற்கரை – எழும்பூர் இடையிலான நான்காவது ரயில் பாதை அமைக்கம் திட்டத்தை மாற்றி அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்திருக்கிறது. வரும் ஜூலை 1 முதல் அடுத்த 7 மாத காலத்துக்கு பறக்கும் ரயில் சேவையை பகுதியாக ரத்து செய்யவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்த நிலையில், இந்தத் திட்டத்தை நிறுத்துவதாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com