இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு: ரூபாயின் மதிப்பு குறைந்தது!

இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு: ரூபாயின் மதிப்பு குறைந்தது!

ந்தியாவின் கைவசம் உள்ள அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவைக் கண்டு வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும், இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பும் உலக அரங்கில் குறைந்து வருகிறது.

இந்தியாவின் கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணி தற்போது குறையத் தொடங்கி இருக்கிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு இந்தியா பல்வேறு நாடுகளுடன் ரூபாயிலான வர்த்தகத் தொடர்பை மேற்கொண்டது. ரஷ்யா - உக்ரைன் இடையே போர் ஏற்பட்ட காரணத்தால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன. இதனால் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான வர்த்தகத் தொடர்பும் மேம்பட்டது. அதேநேரம் ரஷ்யா, இந்தியாவுடன் ரூபாயிலான பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளத் தொடங்கியது. இதனால் இந்தியாவின் ரூபாய் மதிப்பு உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், உலக அரங்கில் ரூபாயின் மதிப்பும் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில் ரஷ்யா, இந்தியாவுடனான ரூபாய் பரிவர்த்தனையை முறித்துக் கொண்டது. மேலும், சில நாடுகளும் இந்தியாவுடனான ரூபாய் பரிவர்த்தனையை நிறுத்தின. இதன் காரணமாக இந்தியா தனது கைவசம் இருந்த அந்நிய செலாவணியை அதிகம் செலவழிக்கத் தொடங்கியது. மேலும், ஏற்றுமதி, இறக்குமதிக்கு அன்னிய செலாவணி அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனாலும் ரூபாயின் மதிப்பு குறையத் தொடங்கியது. இதனால் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்திய அந்நிய செலாவணி 60 ஆயிரத்து 145 கோடி டாலராக சரிந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின் அடிப்படையில் 241.7 கோடி டாலர் அளவுக்கு அந்நிய செலாவணி சரிந்துள்ளது. ஜூலை 28ம் தேதி நிறைவடைந்த  நிதி வாரத்தில் 316.5 கோடி சரிவைக் கண்டு 60 ஆயிரத்து 387 கோடி டாலராக அன்னிய செலாவணி கையிருப்பு இருந்தது.

மேலும், ஆகஸ்ட் 4ம் தேதி வரையில் அந்நிய நாணய சொத்து மதிப்பு 193.7 கோடி டாலர் சரிவை கண்டுள்ளது. டாலர் இல்லாத பவுண்ட், யூரோ, யேன் ஆகியவற்றின் ஏற்ற இறக்கமே நாணய சொத்து ஆகும். தவிர, இந்தியாவின் தங்கக் கையிருப்பு 22.4 கோடி டாலர் சரிவை கண்டுள்ளது. தற்போது 1827.4 கோடி டாலர் தங்க கையிருப்பு உள்ளது. இதுமட்டுமல்லாமல், சர்வதேச நிதியத்தில் நாட்டின் கையிருப்பு 8.6 கோடி டாலராகக் குறைந்து, 50.99 கோடி டாலராக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com