ஆம்னி பஸ் புக் பண்னியிருக்கீங்களா? நாளை முதல் போக்குவரத்தில் மாற்றம்!

 ஆம்னி பேருந்து
ஆம்னி பேருந்து
Published on

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு வடபழனி, தாம்பரம் வழியாக ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

வேலை, கல்லூரி காரணமாக பலரும் சொந்த ஊர்களை விட்டு வெளியூர்களில் தங்கி பயின்று வருகின்றனர். அதுவும் குறிப்பாக சென்னை பெருநகரத்தில் ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களில் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். அப்போது பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அலைமோதும். இதனால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். குறிப்பாக பெருங்களத்தூர் தாண்டுவதற்கே 2 - 3 மணி நேரம் கூட ஆகும்.

இதனை தடுக்கும் விதமாக ஆம்னி பேருந்துகள் அடுத்த 3 நாட்கள் வடபழனி, தாம்பரம் வழியாக போக இயலாது என்றும் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கத்திற்கு சென்று பயணம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக பேருந்துகள் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்துகள் நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் செல்லும் என்றும், ஏற்கனவே பேருந்து முன்பதிவு செய்தவர்கள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறையின் உத்தரவுப்படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் புதுச்சேரி வழியாக செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com