கத்தார் கால்பந்து போட்டி: பரிசுக் கோப்பையை அறிமுகம் செய்கிறார் தீபிகா படுகோனே! 

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே கத்தார் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைக்கிறார்.

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி அந்நாட்டில் உள்ள லுஸைல் ஐகானிக் மைதானத்தில் டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பரிசுக் கோப்பையை அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்த அங்கீகாரம் பெறும் முதல் இந்திய நட்சத்திரம் என்ற பெருமை தீபிகாவுக்கு கிடைக்கப் பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தீபிகா படுகோன் விரைவில் கத்தாருக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com