தள்ளிப் போகும் தென்மேற்கு பருவமழை - என்னதான் காரணம்?

தள்ளிப் போகும் தென்மேற்கு பருவமழை - என்னதான் காரணம்?
Published on

ஜீன் மாதம் வழக்கமாக ஆரம்பமாகும் தென்மேற்கு பருவமழை இவ்வாண்டு தள்ளிப்போகிறது. அதே நேரத்தில் நாடு முழுவதும் வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு கிடைத்திருபபதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பருவமழை இன்னும் ஒரு மாதம் தள்ளிப்போனாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார்கள்.

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மேற்குப்பகுதிகளில் கடந்து ஒரு மாதத்தில் வழக்கமான மழைப்பொழிவை விட 20 சதவீதம் அதிகமாக பெய்திருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த மாதம் நல்ல மழை பெய்திருக்கிறது. உ.பி, ம.பி, பீகார், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும குறைந்தபட்சம் பத்து சதவீதம் கூடுதலாக மழை பெய்திருக்கிறது.

பருவமழை காலம் இன்னும் ஆரம்பிக்காத நிலையில் கேரளாவில் இன்னும் நிறைய மழைக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், கர்நாடகா, தெலுங்கானா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை என்பது தெரிகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தென்மேற்கு பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பே நல்ல மழை கிடைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையை நம்பி, கொங்கு மண்டல விவசாயிகள் காத்திருக்கிறார்கள். கோவை பகுதியில் உள்ள முக்கிய அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளுக்கு முக்கியமான நீர்வரத்து என்பது தென்மேற்கு பருவ மழையின் மூலம் கிடைப்பதுதான். வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் பருவ மழையால் கொள்ளவை எட்டிவிடும.

ஜூலை மாதம் இறுதிக்குள் தென்மேற்கு பருவமழை பெய்து, அதன் காரணமாக அணைகள் முழுகொள்ளளவை எட்ட வேண்டும். இம்முறை தாமதமாவதால் போதுமான தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவது தாமதமாகிவிடும். பருவமழையை நம்பித்தான் சோளம், நிலக்கடலை போன்றவற்றை பயிரிடப்படுகின்றன. போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால் மானாவாரி பயிர்கள் கருகி விட்டன. ஒரு மாதம் மழை தாமதமானால் சமாளிக்க முடியும். ஆனால், ஆகஸ்டு மாதத்திற்குள் அணைகள் நிரம்பாவிட்டால் சிக்கலாகிவிடும் என்கிறார்கள், கொங்கு மண்டல விவசாயிகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com