உடனடியாக இந்த 14 App-களை டெலிட் செய்யவும்.

உடனடியாக இந்த 14 App-களை டெலிட் செய்யவும்.
Published on

SpinOk என்னும் மோசமான ஸ்பைவர் அடங்கிய 101 ஆண்ட்ராய்டு செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. அந்த செயலிகளில் மக்களால் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட 14 ஆப்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. 

இந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ள 14 செயலிகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் பயன்படுத்தினாலோ அல்லது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலோ, உடனடியாக டெலிட் செய்யுமாறு கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருவேளை அதை நீங்கள் டெலிட் செய்யவில்லை என்றால், அந்த செயலியில் இருக்கும் SpinOk என்ற வைரஸ் உங்களின் மொபைல் போனில் சேமிக்கப்பட்டுள்ள சொந்தத் தகவல்களைத் திருடி அதை ஹேக்கர்களின் ரிமோட் சர்வோர்களுக்கு அனுப்பிவிடும். 

இந்த ஸ்பைவே உள்ளடக்கிய பெரும்பாலான செயலிகள் மினி கேம்ஸ்களாகவும், பரிசு மற்றும் வெகுமதிகளை வழங்கும் செயலிகளாக பயனர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலிகள் பேக்ரவுண்டில் பயனர்களின் அனைத்து செயல்பாடுகளையும் கவனிக்கிறது என சொல்லப் படுகிறது. ஸ்பின் ஓகே என்ற ஸ்பைவேரால் பாதிக்கப்பட்ட நூறு செய்திகளையும் கண்டறிந்து அதைப்பற்றி புகார் அளித்தது டாக்டர் வெப் என்ற பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தான். 

இந்த செயலிகளில் அதிகமாக மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 14 App-களின் பட்டியல் இதோ. 

  1. டாமினோ மாஸ்டர் (Domino Master)

  2. லக்கி ஜாக்பாட் புஸ்ஸர் (Lucky jackpot Pusher)

  3. மிஷன் குரு (Mission Guru)

  4. வைப் டிக் (Vibe tik)

  5. கேஷ் ஈஎம் (CashEM)

  6. டிக்: வாட்ச் டு எர்ன் (Tick: Watch to Earn)

  7. பிஷோ நாவல் (Fizzo Novel)

  8. கேஷ்ஜைன் (Cashzine)

  9. நாய்ஸ் (Noizz)

  10. ஸாப்யா (Zapya)

  11. விஃப்ளை (VFly)

  12. எம்விபிட் (MVBit)

  13. பியூகோ (Biugo)

  14. கிரேசி டிராப் (Crazy Drop)

மேற்கண்ட இந்த 14 ஆண்ட்ராய்டு ஆப்களுமே கூகுள் பிளே ஸ்டோரில் அதிகபட்சம் 10 கோடி டவுன்லோட்களும் குறைந்தபட்சம் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட டவுன்லோட் களையும் பெற்றுள்ளது. இந்த செயலிகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் பயன்படுத்தி வந்தாலோ அல்லது இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலோ உடனடியாக அதை டெலிட் செய்துவிடவும். 

மேலும் ஒவ்வொரு முறை ஏதாவது செயலிகளை இன்ஸ்டால் செய்யும்போது, அது நம்பத்தகுந்த வகையில் இருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக்கொள்வது நல்லது. தற்போதெல்லாம் இணையத்தில் கவனமாக செயல்படுவது நம்முடைய கடமையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com