டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் முடக்கம்; ரூ 200 கோடிக்கு கிரிப்டோ கரன்சி கேட்டு மிரட்டல்!

எய்ம்ஸ் மருத்துவமனை
எய்ம்ஸ் மருத்துவமனை
Published on

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கம்ப்யூட்டர் சர்வரை ஹேக்கர்கள் முடக்கியதுடன் ரூ 200 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சிகள் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீது வைரல் தாக்குதல் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு முயற்சிகள் செய்தும் சர்வரை மீண்டும் பழைய நிலைக்கு இன்னும் கொண்டு வரமுடியவில்லை. இதையடுத்து டெல்லி உளவுத்துறைப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உலகதிற்கு அச்சுறுத்தலாய் மாறியிருக்கும் ரான்சாம்வேர் வைரஸ் தாக்கியிருக்கும் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இணைய தளம் ஹேக் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சைபர் கிரைம் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கணினிகளின் இண்டெர்நெட் சேவையும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிரபலமான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதள சர்வரில் முன்னாள் பிரதமர்கள், அரசியல் தலைவர்கள்,  உட்பட 5 கோடிக்கும் அதிகமான நபர்களின் தரவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. கணினிகளில் இண்டர்நெட் வேவையும் முடங்கியுள்ளதால் நோயாளிகளின் தகவல்களை பயன்படுத்த முடியாமல் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் சிரமத்தில் ஆளாகியுள்ளனர். இதனால் தற்போது கணினி இல்லாமல் நோட் புக்கில் நோயாளிகளின் தரவுகளை பதிவு செய்துவருகின்றனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை  சர்வரை ஹேக் செய்த ஹேக்கர்கள் ரூ. 200 கோடி பதிப்பிலான  கிரிப்டோ கரன்சி கேட்டு மிரட்டல் விடுத்துள்ள்னர். இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com