எளிமையான அரசியல்வாதி வலம் வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் பின்னணி தெரியுமா?

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

மூக ஆர்வலர், முன்னாள் அரசு அதிகாரி, இந்திய அரசியல்வாதி என்ன பல்வேறு பரிமாணங்களைக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், சாதாரண மக்களும் நெருங்கக்கூடிய எளிமையான அரசியல்வாதி இந்திய அரசியல் களத்தில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

ஜன லோக்பால் மசோதாவை திட்டமிட்டு உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. 2006ல் ராமோன் மாக்ஸ்ஸே விருபெற்றவர். கரக்பூரில் மெக்கானிக்கல் என்ஜியரிங் படித்த அரவிந்த் கெஜ்ரிவால், 1989 இல் டாடா ஸ்டில் நிறுவத்தில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்காக விடுமுறையில் சென்றார். 1992 இல் தமது வேலையை ராஜிநாமா செய்தவர். அதே ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று வருமான வரித்துறையில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

முஸ்ஸெளரியில் பயிற்சி பெற்றபோது, உடன் பயிற்சி பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சுனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 2011ல் அண்ணா ஹஸாரே தொடங்கிய  ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். அப்போது சாந்திபூஷன், பிரசாந்த் பூஷன், கிரண்பேடி போன்றோரும் அந்த இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினர்.

2012 ஆம் ஆண்டு நவம்பரில் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை நிறுவினார். 2013 இல் அவரது கட்சி முதன் முதலாக தில்லி பேரவைத் தேர்தலில் போட்டியிட்டது. 2013 இல் தில்லி முதல்வரான அவர், லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழலில் 49 நாள் ஆட்சிக்குப் பிறகு முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

2014 ஆம் ஆண்டு வாராணசி தொகுதியில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால், 4 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டு மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜ.க. 3 இடங்களில் வென்றது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

2020 சட்டப்பேரைவ்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றதை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஆம் ஆத்மி கட்சியை தில்லியைத் தாண்டியும் விரிவுபடுத்தினார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெருவெற்றியுடன் ஆட்சியை கைப்பற்றி வரலாறு படைத்தது. அங்கு காங்கிரஸைத் தோற்கடித்து மாநிலத்தில் முதல் அரசாங்கத்தை அமைத்தது. கோவா சட்டசப்பேரவைத் தேர்தலிலும் ஆத் ஆத்மி வெற்றி பெற்றது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

மேலும் தனது எல்லையை விரிவுபடுத்தும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சி மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் போட்டியிட்டது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இந்தியா எதிர்க்கட்சி ஆம் ஆத்மியும் அங்கம் வகிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com