ஷிகர் தவானின் மனைவியைக் கண்டித்த டெல்லி நீதிமன்றம்!

ஷிகர் தவானின் மனைவியைக் கண்டித்த டெல்லி நீதிமன்றம்!
Published on

ந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இவர் கடந்த 2012ம் ஆண்டு ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. தவானின் எட்டு வருட திருமண வாழ்க்கை, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு விவாகரத்தில் முடிந்தது. ஷிகர் தவானும் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியும் தற்போது தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களது மகன் தற்போது ஆயிஷா முகர்ஜியின் வளர்ப்பில் ஆஸ்திரேலியாவில் இருந்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து மற்றும் அவர்களது குழந்தை யாரிடம் இருப்பது என்பது குறித்தான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தவானின் குடும்பத்தினர், ‘2020ம் ஆண்டு முதல் குழந்தையை தாங்கள் பார்க்கவில்லை’ என்று கூறி பாட்டியாலா நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதையடுத்து, ‘ஆகஸ்ட் 2020 முதல் குழந்தை இந்தியாவுக்கு வரவில்லை என்பதையும், தவானின் பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு குழந்தையைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதையும் நீதிபதி ஹரிஷ் குமார் கவனத்தில் எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, ‘குழந்தை தனது தாத்தா பாட்டியை சந்திக்க வேண்டும் என்ற தவானின் விருப்பம் நியாயமானது’ என்று கூறிய நீதிபதி, குழந்தையை இந்தியாவுக்கு அழைத்து வந்து தவானின் குடும்பத்தினரிடம் காட்ட ஆட்சேபம் தெரிவித்ததற்காக ஆயிஷா முகர்ஜியைக் கண்டித்தார்.

மேலும், குழந்தை இந்தியாவில் உள்ள தவானின் வீடு மற்றும் உறவினர்களுடன் பழகுவதை விரும்பாத ஆயிஷாவின் காரணங்கள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். தவிர, ‘குழந்தையின் மீது தாய்க்கு மட்டும் உரிமை இல்லை. குழந்தை ஷிகர் தவானுடன் இருப்பதை விரும்பும் பட்சத்தில் ஆயிஷா ஏன் அனுமதிக்க மறுக்கிறார்’ என்றும் கேள்வி எழுப்பினார். மேற்கு வங்கத்தின் நடுத்தர குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஆயிஷா முகர்ஜி, ஷிகர் தவானை விட 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com