ஸ்டாலினுக்கு டெல்லி கொடுக்கும் நெருக்கடி!!!

தமிழக அரசியல் செய்திகள்
ஸ்டாலினுக்கு டெல்லி கொடுக்கும் நெருக்கடி!!!
Published on

சென்னை : ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று 18 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களிடையே இந்த அரசுக்கு, குறிப்பாக ஸ்டாலின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே சிற்சில குறைபாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு பார்த்தால் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களிடம் நம்பிக்கைபெற்றுதான் இருக்கிறார்.

இச்சூழலில், அடுத்த ஆண்டு (2023) நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் முன்னேற்பாடு வேலைகளை செய்ய தயாராகி வருகிறது.

தேர்தல் பணிகளை தேசிய கட்சிகள் தொடங்கிவிட்டன. பா.ஜ.க.ஆளும் மாநிலங்களில் நலதிட்ட உதவிகளை அக்கட்சி அறிவித்துள்ளது.

பி.ஜே.பி.யும் தன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. தி.மு.க.வை பலவீனப்படுத்தும் வகையில் வேலையை ஆரம்பித்துள்ளது. தி.மு.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதின் மூலம் அதை தம்பக்கம் இழுக்க அல்லது அதை பலவீனப்படுத்த முயன்றுவருகிறது.

மறுபுறம் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி மூலம் தி.மு.க. அரசு அனுப்பும் எந்த மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு விடுவது, அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுகட்டை போடும் விதமாக செயல்படுவது போன்ற நெருக்கடி கொடுக்க தில்லி களம் இறங்கியுள்ளது.

மற்றொருபுறம், தமிழக அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறை மூலம் பதியப்பட்டுள்ள வழக்கு சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் பேர் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

எதிர்க்க தயாராகும் ஸ்டாலின்

தி.மு.க.வில் பதவி வகிக்கும் அந்த பிரமுகர்கள் மேல் குற்றம் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வெளியானால் ஸ்டாலின் அரசுக்கு பெரும் சிக்கல் உருவாகும் என பி.ஜே.பி. நம்புகிறது.

கூட்டணியை வலுவாக அமைத்து இதை மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியும் என பி.ஜே.பி. கணக்கு போட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

தி.மு.க. தலைமையும் “இதை சரியான வழியில் எதிர்கொண்டு பி.ஜே.பி.க்கு தக்கபாடம் புகட்டி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும்” என்ற முனைப்புடன் செயல்பட தொடங்கிவிட்டதாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com